Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஜோன் அமரதுங்க ஐ.தே.க விட்டு சஜித்துடன் இணைகிறார்!

T

The Leader Desk

ஜூன் 20, 2021 • 11:44 AM

ஜோன் அமரதுங்க  ஐ.தே.க விட்டு சஜித்துடன் இணைகிறார்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்திற்க்கு எதிராக தனது நிலைப்பாட்டை இணையத்தளம் ஒன்றில் நடைபெற்ற நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
  • எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் தம்முடன் இணையும் படி எனக்கு பலதடவை அழைப்பு விடுத்தனர்.
  • அவர் தொடர்ந்தும் கூறுகையில், “ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்தில் எந்தவொரு செயற்பாட்டிலும் தாம் இனி பங்கேற்பதில்லை.
எழுத்து அளவு:

தனக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்திற்க்கு எதிராக தனது நிலைப்பாட்டை  இணையத்தளம் ஒன்றில் நடைபெற்ற நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்தில் எந்தவொரு செயற்பாட்டிலும் தாம் இனி பங்கேற்பதில்லை. அனைத்துவித கடமைகள், பொறுப்பிக்களில் இருந்தும் விலகி சுதந்திரமாக வாழ்க்கையை வாழ தீர்மானித்துள்ளேன்.இணைக்கப்பாட்டிற்கு அமைய ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் பதவியை எனக்கு அளிப்பதாக கூறியிருக்கிறார்.

எனினும் அது நடக்கவில்லை. தோல்வியடைந்த ஒருவரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் தீர்மானத்தை அக்கட்சி சற்று பரிசீலித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் தம்முடன் இணையும் படி எனக்கு பலதடவை அழைப்பு விடுத்தனர்.

அதனை நான் நிராகரிக்கவில்லை. அழைப்பை நிராகரிக்க எந்த வித காரணமும் இல்லை. அது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்வேன்.ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக எனது பெறுமதியை அவர்கள் கண்டுள்ளனர். நான் ஒருபோதும் தேர்தலில் தோல்வியடையவில்லை.

2020ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியல் ஊடாக வருவதற்கு நான் எடுத்த தீர்மானம், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் கோரிக்கைக்கு அமைவாகும்.தோல்வியடைந்த ஒருவரை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கும் கலாசாரம் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்ததில்லை” எனக்கு கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜோன் அமரதுங்க ஐ.தே.க விட்டு சஜித்துடன் இணைகிறார்! | Tamil Leader | We Lead the Nation