Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஒருதலைக்காதல் இளம் பெண் குத்திக்கொலை!

T

The Leader Desk

ஜூன் 18, 2021 • 10:53 AM

ஒருதலைக்காதல் இளம் பெண் குத்திக்கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் எலநாடைச் சேர்ந்தவர் பாலசந்திரன் இவரது மூத்த மகள் திரிஷ்யா( வயது 21) இவரை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ( 21) ஒருதலையாக காதலித்து வந்தார்.
  • இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் கடந்த 16 ந் திகதி பாலசந்திரனின் கடைக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.
  • வீட்டின் கீழ் பகுதி பூட்டப்பட்டு இருந்தது கதவை உடைத்து திறந்து உள்ளே சென்ற வினோத் மேல் மாடியில் இருந்த திரிஷ்யாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.
எழுத்து அளவு:

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் எலநாடைச் சேர்ந்தவர் பாலசந்திரன் இவரது மூத்த மகள்  திரிஷ்யா(  வயது 21)  இவரை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ( 21) ஒருதலையாக காதலித்து வந்தார். திரிஷ்யா எங்கு சென்றாலும் அவரை வினோத் பின் தொடர்ந்து சென்றார்.

இது குறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவித்தார் இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் பாலசந்திரன் பொலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் கடந்த 16 ந் திகதி பாலசந்திரனின் கடைக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வினோத் நேற்று காலை திரிஷ்யாவின் வீட்டுக்கு சென்று உள்ளார். வீட்டின் கீழ் பகுதி பூட்டப்பட்டு  இருந்தது  கதவை உடைத்து திறந்து உள்ளே  சென்ற வினோத் மேல் மாடியில் இருந்த திரிஷ்யாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த  திரிஷ்யாவின் சகோதரி தேவஸ்ரீக்கும் கத்திகுத்து விழுந்தது.  திரிஷ்யா சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். தேவஸ்ரீ  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தப்பிக்க முயன்ற வினோத்தை ஆட்டோ ஓட்டுனர் ஜவகர் என்பவர் பிடித்து பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். வினோத் சட்டக்கல்வி படித்து வந்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...