Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அநாவசியமாக மக்களை வெறுப்படையச் செய்யக்கூடாது! ஆனந்த தேரர்

T

The Leader Desk

ஜூன் 18, 2021 • 9:29 AM

அநாவசியமாக மக்களை வெறுப்படையச் செய்யக்கூடாது! ஆனந்த தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அநாவசியமாக மக்களை வெறுப்படையச் செய்து , கோபம் அதிகரிக்கும் வகையில் செயற்பாடாது.
  • அமைச்சரவையில் ஒன்றைக் கூறுகின்றனர்.
  • மக்களின் விருப்பங்களை அறிந்து செயற்படுவதிலேயே இந்த அரசாங்கத்தின் ஆயுள் தங்கியுள்ளது என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

அநாவசியமாக மக்களை வெறுப்படையச் செய்து , கோபம் அதிகரிக்கும் வகையில் செயற்பாடாது. மக்களின் விருப்பங்களை அறிந்து செயற்படுவதிலேயே இந்த அரசாங்கத்தின் ஆயுள் தங்கியுள்ளது என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டினார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , எரிபொருள் விலையேற்றம் நாடு தற்போதுள்ள நிலைமையில் அநாவசியமான ஒன்றாகும். கடந்த அரசாங்கங்களிலும் எரிபொருள் விலையேற்றம் காணப்பட்டது.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தைப் போன்று எவரும் எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை. இவ்வாறிருக்க தற்போது எரிபொருள் விலையை அதிகரித்தவரும் இல்லை , அதனை அறிவித்தவரும் இல்லை , அதனை நடைமுறைப்படுத்துபவரும் இல்லை.

இதனால் நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டிருக்கிறார்கள். இது அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு தனித்து செய்யக் கூடிய விடயமல்ல.

அமைச்சரவையில் ஒன்றைக் கூறுகின்றனர். வெளியில் வந்து ஊடகங்களிடம் பிரிதொன்றைக் கூறுகின்றனர். இதனையா கொள்கை என்று கூறுவது ? இவ்வாறான இரட்டை கொள்கையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.

அநாவசியமாக மக்களை வெறுப்படையச் செய்து , கோபம் அதிகரிக்கும் வகையில் செயற்பாடாது , மக்களின் விருப்பங்களை அறிந்து செயற்படுவதிலேயே இந்த அரசாங்கத்தின் ஆயுள் தங்கியுள்ளது.

மக்களின் கோபத்திற்கு உள்ளாகாமால் சிந்தித்து செயற்பட வேண்டும். யாதார்த்தத்தை உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே எம்மால் முன்னெறே முடியும். தற்போது செல்லும் பாதை அறியாமல் இடை நடுவில் நின்று கொண்டுகின்றோம். இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...