Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சட்டத்தை மீறி செயற்படும் இரகசிய பொலிஸார் தொடர்பில் குற்றச்சாட்டு!

T

The Leader Desk

ஜூன் 18, 2021 • 2:49 AM

சட்டத்தை மீறி செயற்படும் இரகசிய பொலிஸார் தொடர்பில் குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்மையில் கைது செய்யப்பட்ட பல்லேவத்த கமகே சமிந்த தில்ருக் என்ற சந்தேகநபர், கடுவளை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, குற்றப்புலனாய்வு திணைக்களம் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
  • தினெத் மெலன் மாம்புலா என்ற சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்த சமயத்தில் கொல்லப்பட்டார்.
  • மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதான டி.சுனில் இந்திரஜித் மரணம், 22 வயது சந்திரன் விதுஷனின் மரணம் மற்றும் இரு பிள்ளைகளின் தந்தையான 48 வயது மொஹட் அலிகானின் மரணம் ஆகியவற்றுக்கு காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

"உண்மையில், இலங்கை சட்டத்திற்கு அமைய நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்படும் ஒருவரை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவு அல்லது நிர்வாகக் காவலில் வைக்க எவ்வித ஏற்பாடுகளும் இல்லை”

ஜூன் 16 புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்ட பல்லேவத்த கமகே சமிந்த தில்ருக் என்ற சந்தேகநபர், கடுவளை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, குற்றப்புலனாய்வு திணைக்களம் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

"இவ்வாறு இல்லாத ஒரு விதியின் ஊடாகவே, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த நபரை  ஒப்படைக்குமாறு அவர்கள் கோருகின்றார்கள். 

இலங்கையின் சட்டத்தில் இல்லாத ஒரு விதியைப் பயன்படுத்தி இந்த கோரிக்கை விடுக்கப்படுகின்றது.”

நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்த சட்டத்தரணி,  கைதிகளின் அண்மைய தலைவிதியை நினைவு கூர்ந்தார்.

"உடனடியாக, பொலிஸாரும் தொடர்புடைய அதிகாரிகளும் காவலில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், தங்கள் சொந்த நலன்களுக்காக மற்றவர்களைக் கொல்வதையும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.”

கைது செய்யப்பட்ட தன்னுடைய வாடிக்கையாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் சட்டத்தரணி நினைவு கூர்ந்தார்.

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் இருந்த தாரக தர்மகீர்த்தி விஜேசேகர அல்லது கொஸ்கொட தாரகவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக, பொலிஸ் மாஅதிபருக்கு அவரது சட்டத்தரணியால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தினெத் மெலன் மாம்புலா என்ற சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்த சமயத்தில் கொல்லப்பட்டார்.

Police Murder Tharaka

கைதிகளின் உயிருக்கு தொடர்ந்து காணப்படும் ஏற்படும் ஆபத்தை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2020 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் பொலிஸ் காவலில் எட்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருடம் அறிவித்தது.

தாரக தர்மகீர்த்தி விஜசேகர மற்றும் தினெத் மெலன் மாம்புலா ஆகியோர்  ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்பத்தில், சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேரின் உயிரிழப்புகள் குறித்து,  காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதான டி.சுனில் இந்திரஜித் மரணம், 22 வயது சந்திரன் விதுஷனின் மரணம் மற்றும் இரு பிள்ளைகளின் தந்தையான 48 வயது மொஹட்  அலிகானின் மரணம் ஆகியவற்றுக்கு காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...