Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரிகள் அரசாங்கத்திற்குள்ளே உள்ளனர்! கம்மன்பில

T

The Leader Desk

ஜூன் 15, 2021 • 5:40 PM

அரசாங்கத்திற்கு எதிரிகள் அரசாங்கத்திற்குள்ளே  உள்ளனர்! கம்மன்பில 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் என்னை சாட்டாக வைத்துக்கொண்டு ஜனாதிபதியையும், பிரதமரையுமே இவர்கள் தாக்குகின்றனர் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
  • முதுகெலும்பு இல்லாத நபர்கள் ஒளிந்திருந்து கல்லடிக்கின்றனர்.
  • அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் தீர்மானம் எனவும், ஜனாதிபதியும் பிரதமருமே இந்த தீர்மானத்தை எடுத்தனர் எனவும் தெரிவித்தும், ஜனாதிபதி செயலகம் இதற்கான விளக்கத்தை கொடுத்தும் தொடர்ச்சியாக விமர்சிக்கின்றனர்.
எழுத்து அளவு:

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் என்னை சாட்டாக வைத்துக்கொண்டு ஜனாதிபதியையும், பிரதமரையுமே இவர்கள் தாக்குகின்றனர் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் தீர்மானம் எனவும், ஜனாதிபதியும் பிரதமருமே இந்த தீர்மானத்தை எடுத்தனர் எனவும் தெரிவித்தும், ஜனாதிபதி செயலகம் இதற்கான விளக்கத்தை கொடுத்தும் தொடர்ச்சியாக விமர்சிக்கின்றனர்.

என்றால் இது எனக்கு எதிரான தாக்குதல் அல்ல, மாறாக என்னை சாட்டாக வைத்துக்கொண்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமே தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதை அவர்களே கூறியாக வேண்டும். 

வரலாற்றில் எந்தவொரு அமைச்சரும் முன்வந்து எடுக்காத சவாலை நான் எதிர்கொண்டு எரிபொருள் விலை உயர்வு குறித்து அறிவிப்பை விடுத்தேன்.

நான் அரசாங்கத்தை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கை அரசாங்கத்தில் இருக்கும் நபர்களுக்கே பிரச்சினையாக உள்ளது என்றால் அரசாங்கத்தின் எதிரிகள் அரசாங்கத்திற்கு வெளியில் இல்லை, அரசாங்கத்திற்கு உள்ளேயே உள்ளனர்.  

எதிரியை கூட வைத்துக்கொண்டுள்ளோம் என்பதே இதன் வெளிப்பாடாகும். முதுகெலும்பு இல்லாத நபர்கள் ஒளிந்திருந்து கல்லடிக்கின்றனர். இது அவர்களின் ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றது.

சிறந்த தலைவன் என்பவன் சவால்களுக்கு மத்தியில் மக்களுக்காக நின்று போராடுபவன், இன்று நானும் அதே சவால்களை முன்னெடுத்து வருகின்றேன். சவால்களின் போதே ஒரு தலைவன் உருவாவதும் அதேபோல் தலைவர்கள் வீழ்வதும் இடம்பெறும். எனவே மக்கள் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...