Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதன் ஊடாக அவர்கள் உயிராபத்தில் உள்ளனர்!

T

The Leader Desk

ஜூன் 14, 2021 • 6:14 PM

தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதன் ஊடாக அவர்கள் உயிராபத்தில் உள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று பயணத்தடைக்கு மத்தியில் எவ்வித சுகாதாரப் பாதுகாப்பையும் கடைப்பிடிக்காமல் தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதன் ஊடாக அவர்கள் உயிராபத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
  • தவிரவும், நோய் தொற்றிய தொழிலாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று பயணத்தடைக்கு மத்தியில் எவ்வித சுகாதாரப் பாதுகாப்பையும் கடைப்பிடிக்காமல் தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதன் ஊடாக அவர்கள் உயிராபத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதற்குத் தேவையான பொருளாதார வசதிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மற்றும் தோட்டங்களை அண்டி வாழும் மக்களுக்கும் இல்லை என்பதால், அவர்கள் முகம் கொடுக்கும் ஆபத்தை கருத்தில் கொண்டு துரிதமாக தடுப்பூசி வழங்கும் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமெனவும் இந்தக் கடித்தின் வாயிலாக தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையம் கேட்டுள்ளது.

தவிரவும், நோய் தொற்றிய தொழிலாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள கட்டுப்பாட்டுச் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ள நாளொன்றிற்கான அடிப்படை சம்பளம் ரூ.1000வை பல்வேறு காரணங்களை காட்டி குறைத்தமை உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை அனுபவித்து வந்த சிறப்புரிமைகள் மறுக்கப்பட்டமை ஆகியன குறித்து பேசுவதற்காக தமது சங்கத்திற்கு கலந்துரையாடலொன்றை பெற்றுத் தருமாறும் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...