Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை! புபுது ஜயகொட

T

The Leader Desk

ஜூன் 14, 2021 • 11:44 AM

மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை! புபுது ஜயகொட

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவரது நேர்காணலின் சாராம்சம், சாகர காரியவசம் உதய கம்மன்பிலவிற்கும், உதய கம்மன்பில சாகர காரியவசத்திற்கும் பதிலிளித்துக் கொண்டாலும், எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களில் எவராவது பதிலளிக்கவில்லை.
  • உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 70 டொலர்.
  • ல்; 98 டொலராக இருந்தபோது கூட இந்நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 158 ரூபாய்க்கே விற்கப்பட்டது.
  • மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 81 டொலராக இருந்த 2018ல், இலங்கையில் பெற்றோல் விலை ரூ.150க்கு விற்கப்பட்டது.
எழுத்து அளவு:

அவரது நேர்காணலின் சாராம்சம்,

சாகர காரியவசம் உதய கம்மன்பிலவிற்கும், உதய கம்மன்பில சாகர காரியவசத்திற்கும் பதிலிளித்துக் கொண்டாலும், எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களில் எவராவது பதிலளிக்கவில்லை.

சாகர காரியவசம் கூறுவதைப் போன்று கம்மன்பில தன்னிச்சையாக எரிபொருள் விலையை அதிகரித்திருந்தால், நகைச்சுவை அறிக்கைகளை வெளியிடாமல் எரிபொருள் விலையை குறைப்பதற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 70 டொலர். 2014ல்; 98 டொலராக இருந்தபோது கூட இந்நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 158 ரூபாய்க்கே விற்கப்பட்டது. மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 81 டொலராக இருந்த 2018ல், இலங்கையில் பெற்றோல் விலை ரூ.150க்கு விற்கப்பட்டது. மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 67 -68 டெலராக விற்கப்பட்ட காலத்தில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 137 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆகவே இரண்டு டொலரால் அதிகரிக்கப்பட்டதால் இத்தருணத்தில் பெற்றோல் ஒரு லீற்றர் 157 ரூபாவாக விலை நிர்ணயிக்க வேண்டியதில்லை.

மாத்திரமல்ல, உலகச் சந்தையில் மசகு எண்ணைய் விலை குறைக்கப்பட்ட காலத்தில் இந்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்காத அரசாங்கம், அப்போது அதிக லாபத்தை பெற்றுக் கொண்டது 2020 மார்ச் மாதம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 45 டொலராக இருந்தது. ஆனால் இலங்கையில் எரிபொருள் விலையில் ஒரு சதமாவது குறைக்கப்படவில்லை.

எஞ்சிய பணத்தைக் கொண்டு நிதியமொன்றை அமைத்து உலகச் சந்தையில் எரிபொருள் அதிகரித்தாலும் இந்நாட்டில் விலை அதிகரிக்கப்படாதிருக்க அதனை பயன்படுத்துவதாக அப்போதைய அரசாங்கம் கூறியது. ஆறு மாதத்தில் 200 பில்லியன் பணத்தை சேமிக்க முடியுமெனக் கூறிய அரசாங்கம், அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இலங்கையில் எரிபொருள் சம்பந்தமான ஒட்டுமொத்த செயற்பாட்டையும் அரசாங்கம் தனியார்மயமாக்க தயாராகி வருகிறது. சாகர காரியவசம், உதய கம்மன்பில போன்றவர்கள் உட்பட முழு அரசாங்கமும் என்ன செய்ய வேண்டுமென்றால், பொய் நாடகங்களை அரங்கேற்றாமல் மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், செயற்கை மோதல்களை உருவாக்கிக் காட்டுவது மக்களின் அறிவை கொச்சைப்படுத்துவதாக இருக்கும்.

பிரதமர் தலைமையிலான வாழ்கைச் செலவுகள் சம்பந்தமான துணைக்குழுவே எரிபொருள் விலை அதிரிப்பதற்குத் தீர்மானித்தது. இப்போது இதை இரு நபர்களின் மோதலாக தூக்கிப் பிடிக்க முயற்சிக்கிறார்ள். மக்களை முட்டாள்களென நினைத்து விட்டார்கள் போலும், எனவே, அதற்கு ஏமாறாமல், எரிபொருள் விலையை குறைப்பதற்காகப் போராட மக்கள் அணிதிரள வேண்டும்’. என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...