Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முடியப்போகிறது! ஆனந்த தேரர்

T

The Leader Desk

ஜூன் 14, 2021 • 11:01 AM

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முடியப்போகிறது! ஆனந்த தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • இதன் மூலம் நாடு அழிவை நோக்கி செல்ல முடியும்.
  • இது தொடர்பில் அவர் பேசியதாவது, மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
எழுத்து அளவு:

நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் பேசியதாவது, மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்துடன் அத்துடன் முடிந்து விடும் என்பதே எனது நம்பிக்கை. அப்படியான இடத்திற்கு வழியை ஏற்படுத்தாது நாட்டையும் காப்பாற்றி நாட்டை முன்னெடுத்துச்செல்லுங்கள் என்பதே எமது கோரிக்கை.

எமது மாதுளுவாவே சோபித தேரர் உயிருடன் இருக்கும் போது, ஒருவரிடம் நாட்டின் அதிகாரத்தை வழங்காதீர்கள் என்ற வார்த்தையை கூறினார். இதன் மூலம் நாடு அழிவை நோக்கி செல்ல முடியும். அது தற்போது நடந்துள்ளது. ஒருவரிடம் அதிகாரங்களை கொடுத்து விட்டு, வேறு வேலைகளை தற்போது செய்கின்றனர்.

அமைச்சர் உதய கம்மன்பில் எரிபொருள் விலைகளை அதிகரித்த போது, இதனை செய்ய வேண்டாம், மக்களின் அதிருப்தி அதிகரிக்கும் என்று கூறி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அதனை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.

அதுதான்நிறைவேற்று அதிகாரம் என்பது. அப்படியில்லை என்றால், நிறைவேற்று அதிகாரத்தில் எந்த பயனுமில்லை என்றார். முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட பௌத்த பிக்குகளில் முதன்மையாக இருந்து செயற்பட்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முடியப்போகிறது! ஆனந்த தேரர் | Tamil Leader | We Lead the Nation