Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சாகர காரியவசத்துக்கு விசர்! முடிந்தால் அவர் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வர வேண்டும்! உதய கம்மன்பில

T

The Leader Desk

ஜூன் 13, 2021 • 12:05 PM

சாகர காரியவசத்துக்கு விசர்! முடிந்தால் அவர் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வர வேண்டும்! உதய கம்மன்பில

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிசக்தி அமைச்சில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
  • பிரதமரின் புகைப்படத்தை தாங்கிய கடித தலைப்புடனான தாளில் எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பில் விமர்சனம் செய்தது மூலம் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையே விமர்சனம் செய்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
  • எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கருத்து வெளியிட்டிருந்தார்.
எழுத்து அளவு:

எரிசக்தி அமைச்சில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கருத்து வெளியிட்டிருந்தார்.

மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்திய அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென அவர் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கம்மன்பில தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எரிபொருட்களுக்கான விலை உயர்த்தப்படுவதற்கு பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவின் எழுத்து மூல அனுமதி அவசியமானது என்பது கூட தெரியாத ஒருவரே பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமரின் புகைப்படத்தை தாங்கிய கடித தலைப்புடனான தாளில் எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பில் விமர்சனம் செய்தது மூலம் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையே விமர்சனம் செய்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவு குறித்த துணை அமைச்சுக் குழுவினாலேயே எரிபொருள் விலையேற்றம் பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அதனைகூட புரிந்து கொள்ள முடியாத ஒருவர் பொதுஜன முன்னணியின் முக்கிய பதவி வகித்து வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இவ்வாறான கருத்து வெளியிட்டிருந்தால் அவருக்கு விசர் என்று அதை பொருட்படுத்தியிருக்க தேவையில்லை எனவும், கட்சியொன்றின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இவ்வாறு கருத்து வெளியிடுவதனை உதாசீனம் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த தீர்மானத்தை ஊடகங்களின் முன்னிலையில் அறிவித்தனைத் தவிர வேறு எதனையும் தாம் செய்யவில்லை எனவும் ஜனாதிபதியும் பிரதமரையும் அசௌகரியத்திற்கு உட்படுத்த செயற்படும் அந்த மறைகரம் எது என்பது கண்டறியப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எரிபொருள் விலையேற்றம் பற்றிய அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க தாம் தயார் எனவும், சாகர காரியவவசம் முடிந்தால் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வர வேண்டும் எனவும் இதனை ஓர் சவாலாக விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடுகளின் பின்னணியில் பெசில் ராஜபக்ச செயற்படுகின்றாரா என ஊடகவியலளார்கள் கேள்வி எழுப்பிய போது, தமது பின்னணியில் பெசில் இல்லை எனவும் சாகர பின்னணியில் பெசில் இருக்கின்றாரா தெரியவில்லை அதனை ஆராய்ந்துதான் பார்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

சாகர காரியவசம் தம்மை பதவி விலகுமாறு கோரியதன் மூலம் அவரது அறிவு மட்டத்தை நாட்டு பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளதாக உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...