Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரணிலால் மஹிந்தவைப் போன்று சாதிக்க முடியாது! தயான் ஜயதிலக்க

T

The Leader Desk

ஜூன் 12, 2021 • 11:52 AM

ரணிலால் மஹிந்தவைப் போன்று சாதிக்க முடியாது! தயான் ஜயதிலக்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலுக்கான உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார்.
  • இந்நிலையில் ரணிலின் பாராளுமன்ற வருகையானது எந்தவொரு வகையிலும் தாக்கம் நிறைந்ததாக இருக்கப்போவதில்லை.
  • இந்நிலையில் அவரது வருகையால் தற்போது பிரதான எதிர்க்கட்சியான இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியிடையே குழப்பமான நிலைமைகள் தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையில் தயான் ஜயதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலுக்கான உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது வருகையால் தற்போது பிரதான எதிர்க்கட்சியான இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியிடையே குழப்பமான நிலைமைகள் தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையில் தயான் ஜயதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்,தெரிவிக்கையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை இலங்கையின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்திருந்தனர். அதுமட்டுமன்றி, ஐ.தே.க.வின் கோட்டையென்று கூறப்படும் கொழும்பில் அம்பாந்தோட்டையில் இருந்த வருகைதந்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை மக்கள் வெற்றிபெறச் செய்தனர்.

இந்தச் செயற்பாடானது ஐ.தே.கவையும், கொழும்பில் போட்டியிட்ட அதன் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே பொருளாகும். அவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்டு, மக்கள் மத்தியிலான பிரபல்யத்தைக் கொண்டிருக்காத ஒருவர் பாராளுமன்றத்திற்கு மீண்டும் வருகை தருவதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரபல்யமாக அடைந்த எழுச்சியைப் போன்று ரணிலால் எழுந்து நிற்க முடியாது என அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் ரணிலின் பாராளுமன்ற வருகையானது எந்தவொரு வகையிலும் தாக்கம் நிறைந்ததாக இருக்கப்போவதில்லை.

வெறுமனே சபை அமர்வுகளில் ஆளும் தரப்பு அவரைப் பயன்படுத்தி குழப்பங்களை தோற்றுவிப்பதற்கு மட்டுமே வழிவகுக்கப்போகின்றது. அத்துடன் இவரது வருகையால் எதிர்க்கட்சியினுள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறு குழப்பமடைய வேண்டிய எந்த அவசியமும் எதிர்க்கட்சிக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், ரணிலின் நிலைமையானது இவற்றுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. அவரால் தனி நபராக எதனையும் சாதிக்க முடியாது. மக்கள் நிராகரித்த பின்னரும் அவர் மீண்டும் பாராளுமன்றம் வருகின்றமையானது வெட்கப்பட வேண்டியது எனவும் கலாநிதி.தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...