Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அனுமதியின்றி நிர்மாணிக்கப்படும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குற்பட்ட கல்குவாரி தொழிற்சாலையை உடன் நிறுத்துக!

T

The Leader Desk

ஜூன் 11, 2021 • 11:09 AM

அனுமதியின்றி நிர்மாணிக்கப்படும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குற்பட்ட கல்குவாரி தொழிற்சாலையை உடன் நிறுத்துக!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த கல்குவாரி நிர்மாணமானது எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மண்டானை கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
  • எனினும் அந்த கல்குவாரியை எந்த இடத்தில் நிர்மாணிக்க வேண்டும் என்பது தொடர்பான அனுமதியினை அவர் திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றிடமிருந்து இதுவரை பெறவில்லை.
  • எனவே பிரதேச செயலக மற்றும் பிரதே சபை அனுமதியின்றி அரச காணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்குவாரி நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு சாகமம் கிராம சேவகர் உத்தியோகத்தர் பார்த்திபனூடாக சம்பந்தப்பட்ட நபருக்கு கடந்த 30 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
  • குறித்த நபர் இன்று வரை (2021.06.11) என்னை வந்து சந்திக்காத நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகத்துக்கு சமூகமளித்து என்னை சந்திக்குமாறு மீள் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

குறித்த கல்குவாரி நிர்மாணமானது எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மண்டானை கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதாவது இந்த நிர்மாணப் பணியினால் ஒலி மற்றும் காற்று மாசுபாடு என்பவற்றை எதிர்நோக்கக் கூடும் என்றும், கனரக வாகனங்களில் போக்குவரத்தினால் ஏற்கனவே சேதமடைந்துள்ள மண்டானை கிராம வீதியானது கல்குவாரி நிர்மாணத்தின் பின்னர் மேலும் பாதிப்படையக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு திருக்கோவில் பிரதேச செயலக மற்றும் பிரதேச சபையின் உத்தரவுகள் இருந்தபோதிலும் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை கவலையளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளானர்.

ஆகவே கல்குவாரி நிர்மாணப் பணிகளை தற்போதைய இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றியமைத்து முன்னெடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த கல்குவாரி நிர்மாணப் பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் தங்கையா கஜேந்திரன்,

மேற்படி கல்குவரி நிர்மாணத்தினை மேற்கொள்ளும் நபர், கல்குவாரியை நிர்மாணிப்பதற்கான அனுமதிகளை ஏனைய அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் அந்த கல்குவாரியை எந்த இடத்தில் நிர்மாணிக்க வேண்டும் என்பது தொடர்பான அனுமதியினை அவர் திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றிடமிருந்து இதுவரை பெறவில்லை.

எனவே பிரதேச செயலக மற்றும் பிரதே சபை அனுமதியின்றி அரச காணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்குவாரி நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு சாகமம் கிராம சேவகர் உத்தியோகத்தர் பார்த்திபனூடாக சம்பந்தப்பட்ட நபருக்கு கடந்த 30 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

அதேநேரம் காணி தொடர்பான உரிய ஆவணங்களுடன் என்னை பிரதேச செயலகத்தில் வந்து சந்திக்குமாறும் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று வரை (2021.06.11) என்னை வந்து சந்திக்காத நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகத்துக்கு சமூகமளித்து என்னை சந்திக்குமாறு மீள் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பினையும் அவர் புறக்கணித்து செயற்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருக்கோவில் பிரதேச சபையினூடாக சாகமம் கிராம சேவகரினால் நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு சுவரொட்டிகளும் குறித்த கல்குவாரி தொழிற்சாலையின் நிர்மாணக் கட்டிடத்தில் இன்றைய தினம் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...