Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் இன்று போராட்டம்!

T

The Leader Desk

ஜூன் 11, 2021 • 2:32 AM

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் இன்று போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
  • பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லீட்டர் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.
  • சென்னையில் இன்று பெட்ரோல் லீட்டர் 97.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • அதேபோல், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நாடு ஒருபேரழிவை சந்தித்துள்ள போது மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
எழுத்து அளவு:

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லீட்டர் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லீட்டர் 97.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்குகளில் நீங்கள் பணம் செலுத்தும்போது, மோடி அரசின் பணவீக்க உயர்வை உணர்வீர்கள். வரி வசூல் தொற்று அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நாடு ஒருபேரழிவை சந்தித்துள்ள போது மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். பின்னர் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது’ என தெரிவித்தார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. பெட்ரோல் நிலையங்கள் (பங்க்குகள்) முன்பு இந்த போராட்டம் நடைபெற உள்ளது. தேசிய,  மாநில, மாவட்ட அளவில் பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்கள் பங்கேற்ற்க உள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் இன்று போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation