Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கால்நடை வளர்ப்பவர்களின் இன்றைய நிலைமை!

T

The Leader Desk

ஜூன் 9, 2021 • 11:51 AM

கால்நடை வளர்ப்பவர்களின் இன்றைய நிலைமை! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு லீற்றர் பாலை 75 ரூபாவுக்கே விற்கின்றனர்.
  • இவர்களிடம் பால் பெறுகின்றவர்கள் அதனை 105 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.
  • பண்ணையாளர்களது பாலை கொள்வனவு செய்யும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் உற்பத்தி செலவினை கருத்தில் கொண்டு நியாய விலையில் பாலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எழுத்து அளவு:

தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நம்பி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வரும் பண்ணையாளர்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியிலே தமது குடும்ப சீவியத்தை நடத்தி வருகின்றனர்.

பெருந்தொற்றுக் காலத்தில் கூட பண்ணையாளர்கள் தங்களது பால் உற்பத்தியை விற்பனை செய்ய முடியாதுள்ளனர். தூர இடங்களில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் கூட வருகை தருவதில்லை. எல்லாப் பொருட்களுக்கும் விலை ஏறியுள்ள போதிலும் பாலின் விலையில் மட்டும் மாற்றம் ஏற்படாதுள்ளது. ஒரு லீற்றர் பாலை 75 ரூபாவுக்கே விற்கின்றனர். இவர்களிடம் பால் பெறுகின்றவர்கள் அதனை 105 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் நியாய விலையில் பாலை விற்பனை செய்ய முடியாதுள்ளனர். பண்ணையாளர்களது பாலை கொள்வனவு செய்யும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் உற்பத்தி செலவினை கருத்தில் கொண்டு நியாய விலையில் பாலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோருகின்றனர்.

இயந்திரங்கள் மூலம் வயல் நிலங்களில் நெல் அறுவடை நடைபெறுவதனால் மாட்டுக்குரிய போதியளவு வைக்கோலைக் கூட பெற முடியாதுள்ளனர். முன்னர் இலவசமாகவும், குறைந்த விலைக்கும் பெற்று வந்த வைக்கோலை தற்போது 8000 ஆயிரம் ரூபா கொடுத்து பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை கால்நடைகளைப் பராமரிக்கின்ற செலவுகள் அதிகரித்துள்ளன.

மாடுகளுக்கு நோய் ஏற்படுகின்ற நிலையில் அதற்குரிய ஊசி மற்றும் மருந்துகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. தற்போது பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால் பரம்பரை பரம்பரையாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட பலர் தங்களால் தொடர்ந்தும் கால்நடைவளர்ப்பில் ஈடுபட முடியாது இத்தொழிலை கைவிட்டுச் செல்லும் நிலையிலுள்ளனர்.

பண்ணையாளர்களுக்கு உதவிகள், சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் அவை எதுவும் தமக்கு கிடைப்பதில்லை என இங்குள்ள பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றுக் காரணமாக கால்நடைகளை பராமரிக்கவும், உற்பத்தி செய்யப்படும் பாலை விற்பனை செய்யவும் முடியாது மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வருமானத்தை இழந்து வாழ்ந்து வரும் பண்ணையாளர்களின் குடும்பத்திற்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...