Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மாற்றுக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு தடுப்பு முகாம்! ஜனாதிபதி ஒப்பத்துடன் வெளியான வர்த்தமானி

T

The Leader Desk

ஜூன் 9, 2021 • 5:36 AM

மாற்றுக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு தடுப்பு முகாம்! ஜனாதிபதி ஒப்பத்துடன் வெளியான வர்த்தமானி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் அடக்குமுறை செய்யவிருக்கும் நபர்களை இந்த நிலையத்தில் தடுத்து வைக்க உத்தேசித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
  • அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பு நிலையங்கள் அனைத்தும் கொவிட் வைரஸ் தடுப்பு தனிமைப்படுத்தல் நிலையங்களோடு இணைத்துள்ளமையால் புதிதாக கைது செய்யப்படவிருக்கும் நபர்கள் இந்த தடுப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படக் கூடுமென அனுமானிக்கப்படுகிறது.
  • சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை விமர்சித்தமையும், அரசியல் தலைமைத்துவத்தின் பலவீனங்களை கேலி செய்தமையும் காரணமாக புதிய அடக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தேவை சம்பந்தமாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே கூறியிருந்தார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் 2021 ஜூன் 4ம் திகதி வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கொழும்பு 5, கிருலப்பன அவென்யூ, 145ம் இலக்க இடம் 1979 இலக்கம் 46 பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் 9வது உறுப்புரையின் காரியங்களுக்காக தடுப்பு நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் அடக்குமுறை செய்யவிருக்கும் நபர்களை இந்த நிலையத்தில் தடுத்து வைக்க உத்தேசித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை விமர்சித்தமையும், அரசியல் தலைமைத்துவத்தின் பலவீனங்களை கேலி செய்தமையும் காரணமாக புதிய அடக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தேவை சம்பந்தமாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே கூறியிருந்தார்.

கருத்து சுதந்திரத்திற்கான அரசியலமைப்புச் சார்ந்த உரிமை மீறப்பட்டு இந்தக் காரணிகளின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை தடுத்து வைப்பதற்காக மேற்குறித்த நிலையம் பெயரிடப்பட்டுள்ளது தெரிகிறது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பு நிலையங்கள் அனைத்தும் கொவிட் வைரஸ் தடுப்பு தனிமைப்படுத்தல் நிலையங்களோடு இணைத்துள்ளமையால் புதிதாக கைது செய்யப்படவிருக்கும் நபர்கள் இந்த தடுப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படக் கூடுமென அனுமானிக்கப்படுகிறது.

எப்படியிருந்தாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது பதவியை பயன்படுத்தியே இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். ஆனால், இத்தகைய வர்த்தமானி அறிவித்தலொன்றில் ஒப்பமிடுவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சருக்கே உண்டு.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...