Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஒத்திகைக்காக ஐசியு நோயாளிகளின் ஒக்சிஜனை துண்டித்ததாக சர்ச்சை! தனியார் மருத்துவமனை செயல்பாட்டை விசாரிக்க உத்தரவு!

T

The Leader Desk

ஜூன் 8, 2021 • 6:51 AM

ஒத்திகைக்காக ஐசியு நோயாளிகளின் ஒக்சிஜனை துண்டித்ததாக சர்ச்சை! தனியார் மருத்துவமனை செயல்பாட்டை விசாரிக்க உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
  • அதை நாங்கள் செய்தது யாருக்கும் தெரியாது.
  • காலை 7 மணிக்கு நடந்த ஒத்திகையின் அங்கமாக ஒக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த 22 நோயாளிகளை அடையாளம் கண்டோம்.
  • அவர்களுக்கான ஆக்சிஜனை 5 நிமிடங்களுக்கு துண்டித்தோம்.
எழுத்து அளவு:

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் அரின்ஜே ஜெயினின் குரல் என நம்பப்படும் காணொளி தனியார் ஊடக ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதில் அரின்ஜே ஜெயினின் உருவம் தெரியவில்லை. அவரது குரல் மட்டுமே கேட்கிறது. அந்த ஆடியோவில், "உத்தர பிரதேச முதல்வராலேயே மாநிலத்துக்கு தேவையான ஒக்சிஜனை பெற முடியவில்லை.

எனவே, நோயாளிகளை விரைவாக டிஸ்சார்ஜ் செய்யுங்கள். மோதி நகரில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நோயாளிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற தொடங்கினோம். சிலர் நாங்கள் சொல்வதை கேட்டனர். சிலர் மருத்துவமனையில் புறப்பட தயாராக இல்லை. எனவே. ஒத்திகை போன்ற ஒன்றை நடத்த முடிவெடுத்தேன். அதன் மூலம் யாருக்கெல்லாம் ஒக்சிஜன் தேவை, யாருக்கெல்லாம் தேவைப்படாது என்பதை அறிய திட்டமிட்டோம்.

அதை நாங்கள் செய்தது யாருக்கும் தெரியாது. காலை 7 மணிக்கு நடந்த ஒத்திகையின் அங்கமாக ஒக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த 22 நோயாளிகளை அடையாளம் கண்டோம். அவர்களுக்கான ஆக்சிஜனை 5 நிமிடங்களுக்கு துண்டித்தோம்.

அதில் பலரது உடல் நீல நிறமாக மாறியது. அவர்கள் எல்லாம் ஒக்சிஜன் தீவிர தேவை உடையவர்கள் என கண்டறிந்தோம்," என்று பேசுகிறார்.

ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய அந்த காணொளி, ஏப்ரல் 28ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காணொளியில் இடம்பெற்ற குரல் பதிவு, பிற தனியார் ஊடகங்களில் திங்கட்கிழமை வைரலானது. இது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபு என். சிங், காணொளியில் கூறப்பட்ட நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

எனினும், அந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்," என்று கூறினார். கடந்த ஏப்ரல் 26,27 ஆகிய திகதிளில் குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் ஏழு கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

எனவே, ஊடகங்களில் வெளிவருவது போல அந்த மருத்துவமனையில் 22 பேர் ஒக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்ததாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பிரபு என். சிங் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...