Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சுமந்திரன் அவல் என நினைத்து உரலை இடித்திருக்கிறார்! டக்ளஸ் தேவானந்தா

T

The Leader Desk

ஜூன் 4, 2021 • 10:23 AM

சுமந்திரன் அவல் என நினைத்து உரலை இடித்திருக்கிறார்! டக்ளஸ் தேவானந்தா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கப்பல் விபத்துக்குக் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என கருதப்படுகின்ற கடற்பரப்பில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
  • இவ்வாறான பின்னணியிலேயே கடலுணவுகளை உண்பதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.
  • வடக்கு கிழக்கு உட்பட்ட நாட்டை சூழவுள்ள பாதிப்புக்கள் அற்ற கடல் பிரதேசங்களிலும் ஆழ்கடல் பிரதேசத்திலும் பிடிக்கப்படுகின்ற மீன்களே கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து பிரதேச சந்தைகளிலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.
எழுத்து அளவு:

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கப்பல் விபத்துக்குக் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என கருதப்படுகின்ற கடற்பரப்பில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு உட்பட்ட நாட்டை சூழவுள்ள பாதிப்புக்கள் அற்ற கடல் பிரதேசங்களிலும் ஆழ்கடல் பிரதேசத்திலும் பிடிக்கப்படுகின்ற மீன்களே கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து பிரதேச சந்தைகளிலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.

அவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களிலும் சந்தேகத்திற்கிடமான பதார்த்தங்கள் கலந்து இருக்கின்றதா என்பது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே கடலுணவுகளை உண்பதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இவை தொடர்பில் எந்தவிதமான பிரஞ்ஜையும் இன்றி, அரசாங்கத்திற்கும் எனக்கும் எதிரான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்கின்ற அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவல் என்று நினைத்து உரலை இடித்துள்ளார்.

அதாவது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்ட கடல் பிரதேசங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்கிக்கப்படுகின்றது.

அவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் கடலுணவு உட்கொள்வதை மக்கள் தவிர்ப்பார்களாயின், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக சுமந்திரன் கரிசனைபட்டதாக தெரியவில்லை.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், சுயநலன்களுக்காகவும் வடக்கு மாகாண சபை ஆட்சியை வீணாக்கியவர்கள், கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்துக் கொடுத்தவர்கள், ரணில் மைத்திரி ஆட்சியில் கிடைத்த வாய்ப்பை அலரிமாளிகைக்குள் அடகு வைத்தவர்கள், கடற்றொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையோடு செயற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...