Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தடுப்பு காவலில் இருந்த இளைஞர் திடீர் மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்

T

The Leader Desk

ஜூன் 3, 2021 • 12:30 PM

தடுப்பு காவலில் இருந்த இளைஞர் திடீர் மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  • அதேவேளை, சிவில் உடையில் சிஜடியினர் வீட்டிற்கு வந்து எனது மகனைக் கைது செய்துள்ளனர்.
  • சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்திருந்த நிலையில் இன்று அதிகாலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
எழுத்து அளவு:

இன்று அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பொலிஸார் குறித்த வீட்டைச் சுற்றிவளைத்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயதுடைய சந்திரன் விதுசன் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்திருந்த நிலையில் இன்று அதிகாலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் வீட்டின் முன்னால் பொதுமக்கள் ஒன்று கூடியதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்ட நிலையில் பொலிஸார் சென்று நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதேவேளை, சிவில் உடையில் சிஜடியினர் வீட்டிற்கு வந்து எனது மகனைக் கைது செய்துள்ளனர். அவர் கஞ்சா விற்பனை செய்வதாக தெரிவித்து வீட்டைச் சோதனையிட்ட போதும் அவர்கள் இங்கிருந்து எதையும் எடுக்கவில்லை. எனது மகனுக்கு வருத்தம் எதுவும் இல்லாது நன்றாகத்தான் இருந்தார். பொலிஸார் இரவு கொண்டு சென்றதன் பின்னர் காலையில் உயிரிழந்ததாக அறிந்தோம். பொலிஸார் அடித்ததால் தான் அவர் இறந்திருக்க வேண்டும் என உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...