Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரியாமல் திருட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது! துமிந்த நாகமுவ

T

The Leader Desk

ஜூன் 2, 2021 • 3:37 PM

மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரியாமல் திருட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது! துமிந்த நாகமுவ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு மத்தியில், கிழக்கு முனையத்திற்குப் பதிலாக மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
  • ஆனால் கிழக்கு முனையத்தில் 51% பங்கை அதானி நிறுவனத்திற்கும், 34 % ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதால், துறைமுக அதிகார சபைக்கு 15 % மட்டுமே எஞ்சியுள்ளது.
  • கிழக்கு முனையம் சம்பந்தமான போராட்டம் நடைபெறும் போது, 51 வீதத்தை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை கொடுப்பதில் பிரச்சினையில்லையெனக் கூறிய இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வீரவன்ச போன்ற தேசாபிமான போலி தேசபக்தர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் என்று நாம் கேட்கிறோம்.
  • மில்லியன் கொள்கலன்களை கையாளும் இலக்குடன் 35 வருடத்திற்கு இந்த முனையம் ஒப்படைக்கப்படவுள்ளது.
எழுத்து அளவு:

கிழக்கு முனையத்தை விற்கும் முயற்சியை துறைமுக தொழிலாளர்கள் போராடி தோற்கடித்ததன் பின்பு, அரசாங்கம் திருட்டுத்தனமாக இந்த ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுள்ளதாக மே (31) ம் திகதி நுகேகொடயில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் மு.சோ.கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ இவ்வாறு கூறினார் கருத்து தெரிவித்த பிரச்சாரச் செயலாளர்,

“கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய அதானி நிறுவனத்திற்கு விற்பதற்காக மே 3ம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும், இதற்கு விருப்பம் தெரிவிக்கும் ஒப்பந்தத்தில் அன்றே கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு மத்தியில், கிழக்கு முனையத்திற்குப் பதிலாக மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. மேற்கு முனையத்தை கட்டுவதைப் பற்றி இன்னும் நினைத்துப் பார்க்கவுமில்லை, கிழக்கு முனையம் பாதுகாக்கப்பட்டதால் பிரச்சினையில்லையென ஆளும் தரப்பு கூறியதால் சில போராட்டங்கள் விடுபட்டன.

ஆனால் கிழக்கு முனையத்தில் 51% பங்கை அதானி நிறுவனத்திற்கும், 34 % ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதால், துறைமுக அதிகார சபைக்கு 15 % மட்டுமே எஞ்சியுள்ளது. தேசிய வளங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படமாட்டாதெனக் கூறிய தேசபக்தி தலைவர்களின் தீர்மானங்கள் தான் இவை. கொழும்பு துறைமுகத்தின் மிகவும் லாபகரமான இடங்கள் கடந்த காலங்களில் சீனாவிற்கும், ஜப்பானுக்கும் விற்கப்பட்டது. கிழக்கு முனையத்தை விற்கும் முயற்சி மக்கள் போராட்டத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இந்த கொள்கலன் முனையம் அதானி நிறுவனத்திற்கு திருட்டுத்தனமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வாரப் பத்திரிகையொன்று வெளிப்படுத்தும் வரை நாட்டின் நாடாளுமன்றம் அறிந்திருக்கவில்லை. மக்களுக்குத் தெரியாமல், மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியாமல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்தின் போலி தேசபக்தர்கள் கூறியதைப் போன்று, இந்த தேசிய வளங்களை தாரைவார்ப்பது தேசத் துரோகம். கிழக்கு முனையம் சம்பந்தமான போராட்டம் நடைபெறும் போது, 51 வீதத்தை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை கொடுப்பதில் பிரச்சினையில்லையெனக் கூறிய இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வீரவன்ச போன்ற தேசாபிமான போலி தேசபக்தர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் என்று நாம் கேட்கிறோம். 3.5 மில்லியன் கொள்கலன்களை கையாளும் இலக்குடன் 35 வருடத்திற்கு இந்த முனையம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த முனையத்தில் தற்போதுள்ள திறனில் பாதியை அதானி பெற முடியும். எனவே இந்த பரிமாற்றம் என்பது துறைமுகத்தின் பாதியை ஒப்படைப்பதற்கு சமம் என்று கணக்கிட முடியும். இந்த முனையத்தை விற்பது நாட்டுக்கு ஆபத்து, போலி தேசபக்த துரைமார் என்ன சொன்னாலும் இந்நாட்டில் இனத்தையும், மதத்தையும முன்வைத்து தேசியக் கொடியை ஏந்தி யூ.என்.பி. கொண்டு வந்த பிறகும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நவ தாராள முதலாளித்துவத்தை செயற்படுத்தும் கொள்கை இதுதான் என்று நாங்கள் கூறுகிறோம்.

நாடாளுமன்றத்திற்குத் தெரியாமல் இப்படிச் செய்தது தவறென எதிர்க்கட்சி துரைமார் சொல்கிறார்கள். யூ.என்.பி. செய்தவற்றைத்தான் இந்த அரசாங்கமும் செய்கிறதென நாங்கள் சொல்கிறோம். இந்த போலி தேசபக்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி, தேசிய வளங்களை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்து செய்யும் இந்த மோசமான காரியங்களினால் இந்நாட்டு மக்களின் பொருளாதார வளங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிடும்.

இதை தடுப்பதற்கு மக்கள் அதிகாரமொன்றை நிர்மாணிப்பதைத் தவிர வேறு பதில் கிடையாது. இதற்காக, இந்த அரசாங்கத்தினதும், எதிர் கட்சியினதும் திட்டங்களை தோற்கடித்து, மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்பி இந்நாட்டு மக்களுக்காக செயற்படும் ஆட்சியொன்றை உருவாக்க முன்வாருங்கள் என்று மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...