Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிரானவரான போராசிரியர் கத்ரி இஸ்மாயில் காலமானார்!

T

The Leader Desk

ஜூன் 2, 2021 • 3:00 PM

கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிரானவரான போராசிரியர் கத்ரி இஸ்மாயில் காலமானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களையும், அதன் பின்னணியிலிருந்த தீவிரவாத குழுக்கள் சம்பந்தமாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
  • கடந்த வருட ஜூன் மாதம் க்ரவுன்ட்வீவ்ஸ் வலைத்தளத்திற்கு எழுதிய கடிதத்தில் முறையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
  • ல் தர்கா நகர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட அவரது பகுப்பாய்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
எழுத்து அளவு:

1980களில் ஆட்சியிலிருந்த ஜயவர்தன அரசாங்கத்திற்கு சவாலாக உருவாகிய மாற்றுக் குழுவின் உறுப்பினராக இருந்த கத்ரி இஸ்மாயில், அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக் கழக ஆங்கிலப் பிரிவின் பேராசிரியராக கடமையாற்றியதோடு, இலங்கை தேசியப் பிரச்சினை சம்பந்தமாக ஆராய்ந்து முற்போக்கான கருத்துக்களை முன்வைத்தவர் என்ற வகையில் பிரபலமானார்.

விசேடமாக சிறுபான்மை இனங்களுக்கு மத்தியிலான ஒடுக்குமுறையை அரசியல் தாபனத்தின் பிரச்சினையாக விமர்சித்த அவர் எழுதிய நூல்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது நீண்டகாலமாக தொடுக்கப்பட்டு வரும் ஒடுக்குமுறையை சமூக விஞ்ஞான ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வற்புறுத்தக் கூடிய படைப்புகளாக இருந்தன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களையும், அதன் பின்னணியிலிருந்த தீவிரவாத குழுக்கள் சம்பந்தமாகவும் அவர் கேள்வி எழுப்பினார். 2014ல் தர்கா நகர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட அவரது பகுப்பாய்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

கடந்த வருடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொற்றுநோயைப் பயன்படுத்தி இராணுவமயமாக்கலை உயர் மட்டத்திற்கு கொண்டு வந்தமை, விசேடமாக மக்களின் ஒழுக்கநெறியோடு சம்பந்தப்பட்ட, இராணுவத் தலைமையிலான செயலணி அமைக்கப்பட்டமை சம்பந்தமாக கடுமையாக விமர்சித்த பேராசிரியர் கத்ரி இஸ்மாயில், ஜனாதிபதி ஒரு பயங்கர நபர் எனக் குறிப்பிட்டு அவருக்கு சவால் விட்டிருந்தார்.

கடந்த வருட ஜூன் மாதம் க்ரவுன்ட்வீவ்ஸ் வலைத்தளத்திற்கு எழுதிய கடிதத்தில் முறையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அவரது கருத்துக்களுக்கு சவால் விடவோ அல்லது சமன் செய்யவோ இலங்கை அறிவுசார் சமூகத்திலிருந்து இதுவரை இதுபோன்ற பகுப்பாய்வு விமர்சனங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...