Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நகரசபை முதல்வரின் பிறந்தநாள்! தனிமைப்படுத்தல் சட்டம் பொதுமக்களுக்கு மட்டும்தானா?

T

The Leader Desk

மே 31, 2021 • 5:58 PM

நகரசபை முதல்வரின் பிறந்தநாள்! தனிமைப்படுத்தல் சட்டம் பொதுமக்களுக்கு மட்டும்தானா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் இதனை ஏற்பாடு செய்ததற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகரை (ஏஎஸ்பி) இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
  • நாட்டில் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு குருநாகல் பொலிசாரால் 7 நாள் பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இதேவேளை கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதைத் தடுக்க 2021 மே 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனைத்து பொதுக் கூட்டங்களும் விருந்துகளும் தடைசெய்யப்பட்ட நேரத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

இந்நிலையில் இதனை ஏற்பாடு செய்ததற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகரை (ஏஎஸ்பி) இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது. குருநாகல் பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் நேற்று நடைபெற்ற ஒரு பிரித் ஓதும் நிகழ்வில், மேயருக்காக கேக் வெட்டுவதை ஏஎஸ்பி ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த பிறந்தநாள் விழா தொடர்பாக விசாரிக்க சிறப்பு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு குருநாகல் பொலிசாரால் 7 நாள் பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடந்த இந்த நிகழ்வில் குருநாகல் மேயர் கலந்து கொண்டார், அந்த சமயத்தில் அவரது பிறந்தநாளும் அந்த இடத்தில் கொண்டாடப்பட்டது.

குருநாகல் ஏஎஸ்பி, மேயரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக கேக் வெட்டுவதை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதேவேளை கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதைத் தடுக்க 2021 மே 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனைத்து பொதுக் கூட்டங்களும் விருந்துகளும் தடைசெய்யப்பட்ட நேரத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...