Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சாம்பல் மேடாய் காட்சியளிக்கும் கடற்கரை!

T

The Leader Desk

மே 30, 2021 • 8:47 AM

சாம்பல் மேடாய் காட்சியளிக்கும் கடற்கரை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து, கடந்த 20ம் தேதி இந்த கப்பலில் தீ பற்றியது.
  • எனினும், கடந்த 25ம் திகதி இந்த கப்பலில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டது.
  • இதனால் கப்பலில் பணியாற்றிய 2 இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • அதேவேளை, கப்பலில் இருந்த 25 பணியாளர்களை இலங்கை கடற்படை மீட்டிருந்தது.
எழுத்து அளவு:

இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து, கடந்த 20ம் தேதி இந்த கப்பலில் தீ பற்றியது.

இந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவை பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தன.

கடலில் சாம்பல்

எனினும், கடந்த 25ம் திகதி இந்த கப்பலில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டது.

இதனால் கப்பலில் பணியாற்றிய 2 இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, கப்பலில் இருந்த 25 பணியாளர்களை இலங்கை கடற்படை மீட்டிருந்தது.

கடலில் சாம்பல்

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, கப்பலில் இருந்த கொள்கலன்கள் கடலில் வீழ்ந்தன.

குறித்த கொள்கலன்களில் இருந்த வேதிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் கடலில் கலந்ததாக தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகமையின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் தெரிவிக்கின்றார்.

கடலில் சாம்பல்

கப்பலிலிருந்து கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருள்கள் நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடல் பிராந்தியத்தில் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையில், கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருள்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடலில் சாம்பல்

கடற்படை, சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட தரப்பினரினால் கடற்கரை பகுதிகள் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன.

பெருமளவிலான பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் கரையொதுங்கி வருவதை காண முடிகிறது.

அதேபோன்று, கறுப்பு நிறத்திலான வேதிப் பொருள்களும் கடலில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த கப்பலிலிருந்து கடலில் கலந்த வேதிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருட்களினால் எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படும் என விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன் தெரிவிக்கிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சாம்பல் மேடாய் காட்சியளிக்கும் கடற்கரை! | Tamil Leader | We Lead the Nation