Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இரகசியமான முறையில் இடம்பெற்ற பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் மூன்றாவது திருமணம்!

T

The Leader Desk

மே 30, 2021 • 6:15 AM

இரகசியமான முறையில் இடம்பெற்ற  பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் மூன்றாவது திருமணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருப்பினும் பொரிஸ் ஜோன்சனின் டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தின் ஊடக பேச்சாளர் இந்த செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
  • கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இங்கிலாந்தில் திருமண வைபவங்களில் பங்கேற்க தற்போது 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
  • வயதான பொரிஸ் ஜோன்சனும் 33 வயதான சைமண்ட்ஸிம் 2019 இல் பிரித்தானிய பிரதமராக ஜோன்சன் பதவியேற்றத்தில் இருந்து டவுனிங் தெருவில் ஒன்றாக வசித்து வருகின்ற நிலையில் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
  • இதனை அடுத்து 2022 ஜூலை திருமணம் செய்துகொள்ளும் முகமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன என்றும் சன் மற்றும் மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:

இருப்பினும் பொரிஸ் ஜோன்சனின் டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தின் ஊடக பேச்சாளர் இந்த செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மத்திய லண்டனில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு இறுதி நிமிடத்தில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டதாகவும் ஜோன்சன் அலுவலகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு கூட திருமணத் திட்டங்கள் தெரியாது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இங்கிலாந்தில் திருமண வைபவங்களில் பங்கேற்க தற்போது 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

56 வயதான பொரிஸ் ஜோன்சனும் 33 வயதான சைமண்ட்ஸிம் 2019 இல் பிரித்தானிய பிரதமராக ஜோன்சன் பதவியேற்றத்தில் இருந்து டவுனிங் தெருவில் ஒன்றாக வசித்து வருகின்ற நிலையில் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இதனை அடுத்து 2022 ஜூலை திருமணம் செய்துகொள்ளும் முகமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன என்றும் சன் மற்றும் மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு முறை விவாகரத்து செய்துள்ள பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு இது மூன்றாவது திருமணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...