Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

T

The Leader Desk

மே 30, 2021 • 6:00 AM

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள், நேற்று (29) கிடைத்துள்ளன.
  • அதனடிப்படையில், எதிர்வரும் 15 நாள்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
  • இருந்த போதிலும், இதனை மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை, வடமாகாணச் சுகாதாரப் பிரிவினர்; முன்னெடுத்ததற்கமைய, இன்று (30) தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது.
  • தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள், நேற்று (29) கிடைத்துள்ளன. இந்தத் தடுப்பூசிகளை அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய ஏற்பாட்டை, சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதனடிப்படையில், எதிர்வரும் 15 நாள்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இதனை மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை, வடமாகாணச் சுகாதாரப் பிரிவினர்; முன்னெடுத்ததற்கமைய, இன்று (30) தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது.

தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி மக்கள் தமது விருப்பத்தின்படி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். எனினும், தடுப்பூசி நடவடிக்கைகளில் தெரிவு செய்யப்பட்ட நபர்களைத் தவிர வேறு பிரிவுகளில் இருந்தோ அல்லது பெயர் பட்டியலில் இல்லாதவர்களோ அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்கள் எத்தனை மணிக்கு அங்கே தடுப்பூசி பெற செல்ல வேண்டுமென, மக்களை அறிவுறுத்துவார்கள். அந்த நேரத்துக்குச் சரியாக சென்று தடுப்பூசியை பெற்றப் பின்னர் வீடு திரும்ப முடியும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...