Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மியன்மாரில் விலைவாசி உயர்வால் வங்கிகளில் பணம் எடுக்க காலையிலேயே படையெடுக்கும் மக்கள்!

T

The Leader Desk

மே 30, 2021 • 5:31 AM

மியன்மாரில் விலைவாசி உயர்வால் வங்கிகளில் பணம் எடுக்க காலையிலேயே படையெடுக்கும் மக்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பெப்ரவரி 1ந்திகதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
  • மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. அவர்களை மியன்மார் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பெப்ரவரி 1ந்திகதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மியன்மார் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்கா, மியன்மார் ராணுவத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.  அவர்களை மியன்மார் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.  தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.  மியன்மாரில் ராணுவ ஆட்சியில் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.  பொதுமக்களிடம் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  கையிருப்பும் குறைவாக உள்ளது.

இதனால், வருங்கால தேவைக்காக வங்கியில் உள்ள தங்களுடைய சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை எடுக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டனர்.

இதுதவிர உள்ளூர் கரன்சி நோட்டின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து உள்ளது.  இராணுவமும் சரியான நேரத்தில் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  இதனால், சிலர் கொள்ளையடிக்கும் நிலைக்கு சென்றுள்ளனர்.

இராணுவ ஆட்சியின் தொடக்கத்தில், வங்கி ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  பின்னர் மெல்ல ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கினர்.  ஆனால், மக்கள் வங்கிகளில் குவிந்து விடாமல் தடுக்க, பணம் எடுப்பதில் இராணுவம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால், ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே வங்கி வாசலில் மக்கள் வந்து வரிசையில் நின்று விடுகின்றனர்.  பணம் எடுக்க முடிந்தவர்கள் உடனடியாக அதனை கருப்பு சந்தையில் கொடுத்து அமெரிக்க டாலராக மாற்றி விடுகின்றனர்.  அல்லது தங்களது பாய், விரிப்புகளின் கீழ் மறைத்து வைத்து விடும் சூழல் காணப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மியன்மாரில் விலைவாசி உயர்வால் வங்கிகளில் பணம் எடுக்க காலையிலேயே படையெடுக்கும் மக்கள்! | Tamil Leader | We Lead the Nation