Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இந்திய வகை,பிரிட்டன் வகை கலந்த ஒரு புதிய கொவிட் திரிபு வியட்நாமில் காற்றில் வேகமாக பரவி வருகிறது!

T

The Leader Desk

மே 30, 2021 • 4:49 AM

இந்திய வகை,பிரிட்டன் வகை கலந்த ஒரு புதிய கொவிட் திரிபு வியட்நாமில் காற்றில் வேகமாக பரவி வருகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த புதிய திரிபு "மிக ஆபத்தானது" என வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன் தெரிவித்துள்ளார்.
  • ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக் கொவிட்-19 கண்டறியப்பட்டது தொடங்கி இன்றுவரை ஆயிரக்கணக்கான முறையில் பிறழ்வுகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  • பலன் தரும் தடுப்பு மருந்துகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் B.1.617.2 என்ற புதிய வகை வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது, இந்த வகை பிரிட்டன் வகை என்று சொல்லக்கூடிய B.1.1.7-ஐ காட்டிலும் வேகமாக பரவக் கூடியது என நிபுணர்கள் கண்டறிந்தனர்.
  • ஒரு டோஸ் தடுப்பு மருந்தில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.
எழுத்து அளவு:

இந்த புதிய திரிபு "மிக ஆபத்தானது" என வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன் தெரிவித்துள்ளார்.

வைரஸ்களில் எப்போதும் பிறழ்வுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஆனால் சில பிறழ்வுகள் முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் சில அந்த வைரஸ்களை அதிக பரவும் தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிறது.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக் கொவிட்-19 கண்டறியப்பட்டது தொடங்கி இன்றுவரை ஆயிரக்கணக்கான முறையில் பிறழ்வுகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

"வியட்நாமில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் வகை, பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸின் வகை என இரண்டு வைரஸின் தன்மைகளையும் கலந்த ஒரு புதிய கோவிட் 19 வகை கண்டறியப்பட்டுள்ளது," என அரசாங்க கூட்டம் ஒன்றில் வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன் தெரிவித்தார் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை, பழைய வகை வைரஸ்களை காட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது எனவும் குயேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த வகை காற்றில் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த வகை வைரஸ் குறித்துத் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்ததாக இணைய செய்தி வலைதளமான விஎன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை வைரஸின் ஜெனிட்டிக் கோட் விரைவிலேயே கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

பலன் தரும் தடுப்பு மருந்துகள்

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் B.1.617.2 என்ற புதிய வகை வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது, இந்த வகை பிரிட்டன் வகை என்று சொல்லக்கூடிய B.1.1.7-ஐ காட்டிலும் வேகமாக பரவக் கூடியது என நிபுணர்கள் கண்டறிந்தனர்.

ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்துகள் இந்த வகை வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன ஆனால் இரு டோஸும் செலுத்திக் கொண்டபிறகுதான் அவை பலனளிக்கின்றன. ஒரு டோஸ் தடுப்பு மருந்தில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.

அதேபோன்று பெரும்பான்மையான மக்கள் மீது எந்த ஒரு வகை கொரோனா திரிபும் மிக மோசமான உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை.

ஆனால் அதிகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் வகை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு இடையில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும்.

வியட்நாம்

வியட்நாம்

வியட்நாமில் கடந்த இரு வாரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெருந்தொற்று பரவல் தொடங்கி இன்றுவரை அந்நாட்டில் 6,700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பாதிக்கு மேல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி பாதிக்கப்பட்டவர்கள்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகள்படி வியட்நாமில் இதுவரை 47 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிகிறது.

குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 5 லட்சத்து 94 ஆயிரத்து 304 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...