Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

T

The Leader Desk

மே 29, 2021 • 12:36 PM

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (28.05.2021) தொலைபேசியில் உரையாடியபோதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
  • குறித்த கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.
  • ஜனாதிபதியின் குறித்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புக்கள் அதிகமுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற அனைத்து மதங்களின் குருமாருக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (28.05.2021) தொலைபேசியில் உரையாடியபோதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பிரதேசங்களுக்கு அவை சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும்   தெரிவித்தார்.

ஜனாதிபதியின் குறித்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புக்கள் அதிகமுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற அனைத்து மதங்களின் குருமாருக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

குறித்த கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

அதேவேளை, பௌத்த சாசன மத விவகார அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் அவர்களும் தடுப்பூசி வழங்கும் போது பாதிப்புக்கள் அதிகமுள்ள பிரதேசத்தில் வசிக்கின்ற அனைத்து மதங்களினதும் குருமாருக்கு முன்னுரிமை அளிப்பது  தொடர்பாக அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (28.05.2021) அரியாலை, பூம்புகார் சண்முகா முன்பள்ளியில் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல்லினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். 

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், மரம் மற்றும் புல் இன் படமாக இருக்கக்கூடும்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...