Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மாலியில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவரை இடைக்கால அதிபராக அறிவித்தது நீதிமன்றம்!

T

The Leader Desk

மே 29, 2021 • 8:15 AM

மாலியில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவரை இடைக்கால அதிபராக அறிவித்தது நீதிமன்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனால், அந்நாட்டில் கடந்த 9 மாதங்களாக இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. மாலியின் அதிபராக பாடாவ் மற்றும் பிரதமராக மொக்தார் உவானே பொறுப்பு வகித்து வந்தனர். இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை அமைச்சரவை மறுசீரமைப்பு நடந்தது.
  • கைது செய்யப்பட்ட மாலியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் எந்தவித முன் நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவை வலியுறுத்தின.
  • அவர்கள் 2 பேரும் கடந்த புதன்கிழமை ராஜினாமா செய்த பின்னரும் சிறை பிடிக்கப்பட்டு இருந்தனர். இதன்பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால், காலியாக உள்ள அதிபர் பதவியை நிரப்பும் வகையில் கொய்டா அந்த பதவியை வகித்திடுவார் என நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்து உள்ளது.
எழுத்து அளவு:

இதனால், அந்நாட்டில் கடந்த 9 மாதங்களாக இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.  மாலியின் அதிபராக பாடாவ் மற்றும் பிரதமராக மொக்தார் உவானே பொறுப்பு வகித்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை அமைச்சரவை மறுசீரமைப்பு நடந்தது.

இதில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டதற்கு ஆதரவாக செயல்பட்ட ராணுவ உறுப்பினர்கள் 2 பேர் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு இருவர் நியமிக்கப்பட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், அதிரடி நடவடிக்கையாக அதிபர் மற்றும் பிரதமரை கைது செய்தது.  இதேபோன்று ராணுவ மந்திரி சொலேமான் டவ்கோர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதனால், அந்நாட்டில் பதற்ற நிலை காணப்படுகிறது.  கடந்த 9 மாதங்களாக மக்களாட்சியை கொண்டு வர தற்காலிக அரசு முயற்சி செய்து வருகிறது.  எனினும், முக்கிய பதவிகளை ராணுவம் கைப்பற்றி அதிகாரத்தில் இருந்து வருவது ஆளும் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கைது நடவடிக்கைக்கு ஆபிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும், அமெரிக்காவும் வன்மையாக கண்டித்துள்ளன. கைது செய்யப்பட்ட மாலியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் எந்தவித முன் நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவை வலியுறுத்தின.

இந்நிலையில், மாலி நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.  ராணுவத்தின் தலைவராக இருந்து வழிநடத்தி சென்று, ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட கேர்ணல் அசிமி கொய்டா என்பவரை மாலியின் இடைக்கால அதிபராக அறிவித்து உள்ளது.  அசிமி, அந்நாட்டின் துணை அதிபராக உள்ளார்.

இந்த கொய்டா என்பவரே, கடந்த ஆகஸ்டில், அதிபராக இருந்த பவுபாக்கர் கெய்டாவை ஆட்சியில் இருந்து வெளியேற்றினார்.  அதன்பின்னர் கடந்த திங்கட்கிழமை, அதிபர் பா டாவ் மற்றும் பிரதமர் மோக்டார் உவானே ஆகியோரை கைது செய்யவும் உத்தரவிட்டவர்.

அவர்கள் 2 பேரும் கடந்த புதன்கிழமை ராஜினாமா செய்த பின்னரும் சிறை பிடிக்கப்பட்டு இருந்தனர்.  இதன்பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  இதனால், காலியாக உள்ள அதிபர் பதவியை நிரப்பும் வகையில் கொய்டா அந்த பதவியை வகித்திடுவார் என நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்து உள்ளது.

எனினும், 15 உறுப்பினர்களை கொண்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பு கடந்த அக்டோபரில், இடைக்கால அதிபராக உள்ளவர் எந்த சூழ்நிலையிலும் அதிபருக்கு மாற்றாக முடியாது என கூறியிருந்தது.  இந்த சர்ச்சை தொடரும் நிலையில், கானாவில் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பின் தலைவர்கள் நாளை ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...