Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பட்டிணியால் சாக போகிறோம்! முல்லைத்தீவு மாவட்ட மக்கள்

T

The Leader Desk

மே 28, 2021 • 8:32 AM

பட்டிணியால் சாக போகிறோம்! முல்லைத்தீவு மாவட்ட மக்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா கொத்தணியில் பலருக்கு தொற்று இணங்காணப்பட்டது.
  • இதன் காரணமாக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17ஆம் திகதியன்று முடக்கப்பட்டன.
  • இருப்பினும் கடுமையான பாதிப்புக்கள் இருந்த 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த 21ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டன.
  • இதேவேளை, கடந்த 17ஆம் திகதி முதல் திடீரென எந்த அறிவித்தலுமின்றி முடக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பில் 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் முள்ளியவளையில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அத்தியாவசியப் உணவுப்பொருட்கள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா கொத்தணியில் பலருக்கு தொற்று இணங்காணப்பட்டது. இதன் காரணமாக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17ஆம் திகதியன்று முடக்கப்பட்டன.

இருப்பினும் கடுமையான பாதிப்புக்கள் இருந்த 11  கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த 21ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டன. எனினும், பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளாந்த கூலித்தொழிலை நம்பிவாழும் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 17ஆம் திகதி முதல் திடீரென எந்த அறிவித்தலுமின்றி முடக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பில் 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் முள்ளியவளையில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அத்தியாவசியப் உணவுப்பொருட்கள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முடக்கப்பட்ட  நிலையிலிருக்கும் புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டார மக்கள், தாம் கொரோனாவால் இறக்கிறோமோ இல்லையோ உணவின்றி இறக்கப்போகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இன்றுவரை எந்த உலருணவு பொருள்களும் கிடைக்கவில்லை. தமது பகுதியிலுள்ள சிலர், தமக்கு பிடித்தவர்களுக்கு மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் மூலம் உதவுவுகின்றனர்.

அவ்வாறான உதவிகளை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னிலைப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி முடக்கநிலையிலும் தமது கிராமத்தில் ஒன்றுகூடி, நேற்று (27) எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், அங்கு வந்த பிரதேச செயலக அதிகாரிகள், அவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கவிடாது பார்ப்பதாகவும் உரிய வகையில் உதவித்திட்டங்களை பெற்றுத்தர ஆவண செய்வதாகவும் தெரிவித்தனர். அதனையடுத்தே, அங்கிருந்து மக்கள் களைந்து சென்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...