Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

எம்.வீ.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் பரவிய தீ கட்டுக்குள்!

T

The Leader Desk

மே 27, 2021 • 6:26 PM

எம்.வீ.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் பரவிய தீ கட்டுக்குள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் கடந்த 20ம் தேதி இந்த கப்பலில் தீ பரவியிருந்தது.
  • எனினும், இந்த கப்பலில் நேற்று முன்தினம் (25) பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருந்தது.
  • மீற்றர் நீளமும், 34 மீற்றர் அகலும் கொண்ட இந்த கப்பலின் அனைத்து பகுதிகளிலும் இந்த தீ பரவியிருந்தது.
  • இந்த நிலையில், குறித்த கப்பல் இந்தியாவின் ஹசிரா மற்றும் கட்டாரின் ஹமாட் துறைமுகங்களுக்குள் செல்ல முயற்சித்த போதிலும், அந்த நாட்டுகள் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் கடந்த 20ம் தேதி இந்த கப்பலில் தீ பரவியிருந்தது.

இந்த நிலையில், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியன ஈடுபட்டிருந்தன. எனினும், இந்த கப்பலில் நேற்று முன்தினம் (25) பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன.

அதனைத் தொடர்ந்து, தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்திருந்த நிலையில், கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன.

186 மீற்றர் நீளமும், 34 மீற்றர் அகலும் கொண்ட இந்த கப்பலின் அனைத்து பகுதிகளிலும் இந்த தீ பரவியிருந்தது.

குறித்த கப்பலில் பெருமளவு இரசாயண பதார்த்தங்கள் இருந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கப்பலில் இருந்த இரசாயன பதார்த்தத்தின் கசிவு காரணமாகவே இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன், இந்தியா கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு கடையினர் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர்.

கப்பலில் பரவிய தீ இந்தியாவின் உதவியுடன் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், தமது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரை பகுதிகளில் கப்பலிலிருந்து கசிந்த இரசாயண பதார்த்தங்கள் கரையொதுங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில் நைட்ரஜன் எசிட், அழகுசாதண பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளமை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

குறித்த இரசாணய பதார்த்தங்கள் உரிய வகையில் களஞ்சியப்படுத்தப்படாமையே, இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணம் என தெரிய வருகின்றது.

இந்த நிலையில், குறித்த கப்பல் இந்தியாவின் ஹசிரா மற்றும் கட்டாரின் ஹமாட் துறைமுகங்களுக்குள் செல்ல முயற்சித்த போதிலும், அந்த நாட்டுகள் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இந்தபின்னணியிலேயே, குறித்த கப்பல் இலங்கை நோக்கி பயணித்துள்ள சந்தர்ப்பத்தில், இந்த தீ பரவியுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, கடலில் இரசாயன பதார்த்தங்கள் கலந்துள்ளனவா என்பது தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடல் ஆய்வு நிறுவனமான நாரா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, நாரா நிறுவனம் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமாக கடல் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்தே நாடு முழுவதும் கடலுணவுகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அதனால், அச்சமின்றி கடலுணவுகளை உட்கொள்ளுமாறும் கடற்றொழில் அமைச்சர், மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கப்பல் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்திலிருந்து குறித்த கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை கப்பலில் மீண்டும் தீக்களத்தில் உள்ள தகவல் என்ன?

இலங்கை கப்பல் தீயை அணைக்க தீவிர முயற்சி: எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பேராபத்து

கடலில் கலந்திருக்கும் இரசாயண பதார்த்தங்கள் தொடர்பிலும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பிலும் நாரா நிறுவனம் ஆய்வுகளை தொடர்ந்தும் நடத்தி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடல் பகுதிகளில் கலந்துள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் சமுத்திர சுற்றாடல் ஆய்வு அதிகார சபை, நாரா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன.

எவ்வாறாயினும், குறித்த கப்பல் முழுவதும் தற்போது தீ பரவியுள்ள நிலையிலேயே, தீ ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

மேலும், குறித்த கப்பலில் தீ பரவியமை குறித்து, கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எம்.வீ.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் பரவிய தீ கட்டுக்குள்! | Tamil Leader | We Lead the Nation