Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி!

T

The Leader Desk

மே 27, 2021 • 3:54 AM

ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா பாதிப்புகளில் இருந்து வன விலங்குகளும் தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
  • இதேபோன்று, உத்தர பிரதேசத்தின் எட்டவாவில் உள்ள சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனை தொடர்ந்து அவை இரண்டும் மற்ற சிங்கங்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டன.
  • இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறும்பொழுது, விலங்குகளிடம் இருந்து கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவியதற்கான தரவுகள் எதுவும் இல்லை.
எழுத்து அளவு:

கொரோனா பாதிப்புகளில் இருந்து வன விலங்குகளும் தப்பவில்லை.  அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதேபோன்று, உத்தர பிரதேசத்தின் எட்டவாவில் உள்ள சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  இதனை தொடர்ந்து அவை இரண்டும் மற்ற சிங்கங்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டன.

எனினும், கொரோனா தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து சில வதந்திகள் நிலவி வந்தன.  இதனால், அச்சமடைந்த பலர் தங்களது வளர்ப்பு பிராணிகளை துரத்தி விட்டுள்ளனர்.  அவை தெருக்களில் ஆதரவின்றி கைவிடப்படும் சூழல் ஏற்பட்டது.

இதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் நல அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.  இந்த வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களும் கூறினர்.

இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறும்பொழுது, விலங்குகளிடம் இருந்து கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவியதற்கான தரவுகள் எதுவும் இல்லை.

கொரோனாவின் முதல் அலையில் நியூயார்க்கில் விலங்கியல் பூங்காவில் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தரவுகளே நம்மிடம் உள்ளன என கூறினார்.

இதேபோன்று, செல்ல பிராணிகளுக்கான விசேட வைத்தியர் சந்தீப் சிங் கூறும்பொழுது,

வளர்ப்பு பிராணிகள் கொரோனா தொற்றை மனிதர்களுக்கு பரப்புவதில்லை.  இந்த வதந்திகளை மக்கள் தவிர்க்க வேண்டும்.  நாய்கள், பூனைகள் போன்றவற்றை தெருக்களில் விட வேண்டிய அவசியமில்லை.

இவை அனைத்தும் வதந்திகளே.  வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதற்கான ஆபத்து உள்ளது என எந்த அமைப்பும் இதுவரை கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ரஷ்யாவில் தங்களுடைய செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.  இதனை முன்னிட்டு ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...