Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கரையை கடந்து வரும் அதிதீவிர “யாஸ் புயல்” - ஒடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கனமழை!

T

The Leader Desk

மே 26, 2021 • 7:07 AM

கரையை கடந்து வரும் அதிதீவிர “யாஸ் புயல்” - ஒடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கனமழை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி ஒடிசா அருகே வங்கக்கடலில் தற்போது கரையை கடந்து வருகிறது.
  • கரையை கடக்கும் போது 185 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
  • புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் சந்திபூர், பாரதீப், தம்ரா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது.
எழுத்து அளவு:

யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி ஒடிசா அருகே வங்கக்கடலில் தற்போது கரையை கடந்து வருகிறது. இதன்படி தாம்ரா - பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடந்து வருகிறது. கரையை கடக்கும் போது 185 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் யாஸ் புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் சந்திபூர், பாரதீப், தம்ரா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. சூறைக்காற்றில் வீடுகள், கட்டடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் ஏற்கனவே புயல் பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். புயலுக்கு பிறகான உதவிகளுக்கு பேரிடர் மேலாண்மை படையினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...