Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சீனாவுக்கு வந்து புதிய நாகரிகத்தை போதித்த போதிதர்மனின் தாய்மொழி தமிழ் என்பதை சீனர்கள் மறந்துவிடக்கூடாது! மனோ

T

The Leader Desk

மே 24, 2021 • 11:26 AM

சீனாவுக்கு வந்து புதிய நாகரிகத்தை போதித்த போதிதர்மனின் தாய்மொழி தமிழ் என்பதை சீனர்கள் மறந்துவிடக்கூடாது! மனோ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும் இது தொடர்பான தனது அவசர மின்னஞ்சல் சீன தூதுவருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • அதற்காக வெளிநாடு ஒன்று எம் தாய்நாட்டுக்குள் வந்து எங்கள் தமிழ்மொழியை புறக்கணிப்பதையும் தமிழின் இடத்தை சீன மொழி (மான்டரின்) பிடிப்பதையும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்பதை சீன அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
  • ஆனால் எங்கள் உலக செம்மொழியாம் தமிழ், 5ம் நூற்றாண்டில் சீனத்துக்கு வந்து, சீனாவுக்கு புதிய நாகரிகத்தை போதித்த.
எழுத்து அளவு:

மேலும் இது தொடர்பான தனது அவசர மின்னஞ்சல் சீன தூதுவருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்துக்களை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்தப் பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “எம் தாய் நாட்டுக்குள்ளே எமது தாய்-தமிழுக்கு சட்டரீதியாக இருக்கும் அந்தஸ்தை எமது அரசே தருவதில்லை. இது கசப்பான உண்மை. ஆனால் இது எமது உள்நாட்டு பிரச்சினை.

அதற்காக வெளிநாடு ஒன்று எம் தாய்நாட்டுக்குள் வந்து எங்கள் தமிழ்மொழியை புறக்கணிப்பதையும் தமிழின் இடத்தை சீன மொழி (மான்டரின்) பிடிப்பதையும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்பதை சீன அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் தாய்-தமிழை, அடிக்கடி திட்டமிட்டு புறக்கணிப்பது சிங்கள-பெளத்த பேரினவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் என சீனா கணக்கு போட்டால் அது ‘தப்புக்கணக்கு’ என்பதை சீனா மனதில்கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி இலங்கைக்கு உள்ளே எண்ணிக்கையில் சிறுபான்மையினர் பேசும் மொழியாக இருக்கலாம்.

ஆனால் எங்கள் உலக செம்மொழியாம் தமிழ், 5ம் நூற்றாண்டில் சீனத்துக்கு வந்து, சீனாவுக்கு புதிய நாகரிகத்தை போதித்த.

சீன மக்களை, சீன நாட்டை விரும்பிய, ‘போதிதர்மனின் தாய்மொழி’ என்பதை சீன அரசாங்கம் குறிப்பாக கொழும்பில் உள்ள சீன தூதுவர் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...