Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்!

T

The Leader Desk

மே 23, 2021 • 5:35 AM

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறிப்பாக, முல்லைத்தீவு நகர் பகுதிக்கு செய்தி அறிக்கையிட செல்லும் ஊடகவியலாளர்கள் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையிரின் வீதி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
  • இவ்வாறான நிலையில் இன்று பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முல்லைத்தீவு நகருக்கு செய்தி சேகரிக்க சென்ற மற்றுமொரு ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

குறிப்பாக, முல்லைத்தீவு நகர் பகுதிக்கு செய்தி அறிக்கையிட செல்லும் ஊடகவியலாளர்கள் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையிரின் வீதி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்கினாலும் குறித்த பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். 

நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு செய்தி அறிக்கையிடலுக்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

தான் ஊடகவியலாளர் மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கமைய செய்தி சேகரிக் செல்வதாக படையினருக்கு தெரிவித்த போதும் படையினர் ஊடகவியலாளர் முல்லைத்தீவு நோக்கி செல்வதற்கான அனுமதியினை மறுத்துள்ளதுடன் கடமையில் நின்ற முள்ளியவளை பொலிசாரிடம் ஊடகவியலாளர் அடையாளப்படுத்தியபோதும் படையினர்கள் ஊடகவியலாளரை செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.   

குறித்த வீதி ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனையவர்கள் மற்றும் பலர் தங்களை அடையாளப்படுத்தி சென்று வருக்கின்ற நிலையில் ஊடகவியலாளருக்கே இராணுவத்தினர் தடை விதிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இன்று பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முல்லைத்தீவு நகருக்கு செய்தி சேகரிக்க சென்ற மற்றுமொரு ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...