Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு!

T

The Leader Desk

மே 22, 2021 • 3:01 AM

நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேபாள நாட்டில் 271 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் கே.பி.
  • கட்சிக்கு 121 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் பெரும்பான்மை பெற 136 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
  • இதன் தொடர்ச்சியாக கடந்த 10ம் திகதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. இதில் பிரதமர் கே.பி.
  • இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க கடந்த 13ந்தேதி இரவு 9 மணி வரை அதிபர் பித்யா தேவி பண்டாரி கெடு வழங்கினார்.
எழுத்து அளவு:

நேபாள நாட்டில் 271 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான சி.பி.என்-யு.எம்.எல். கட்சிக்கு 121 எம்.பி.க்கள் உள்ளனர்.  ஆனால் பெரும்பான்மை பெற 136 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.

இந்நிலையில், ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10ம் திகதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது.  இதில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தோல்வியடைந்து ஆட்சியையும் இழந்தார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க கடந்த 13ந்தேதி இரவு 9 மணி வரை அதிபர் பித்யா தேவி பண்டாரி கெடு வழங்கினார். ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை.

எனவே நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலியையே அதிபர் மீண்டும் நியமித்தார். அதன்படி கடந்த 14ம் திகதி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்று கொண்டார். மேலும் 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் கே.பி. சர்மா ஒலி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில், நேபாளத்தில் பிரதிநிதிகள் சபையை கலைத்து பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகளை அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார்.  இதன்படி, வருகிற நவம்பர் 12,19 ஆகிய திகதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியேற்க முன்வந்த 61 உறுப்பினர்களை கொண்ட நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தூபா மற்றும் கே.பி. சர்மா ஒலி ஆகியோரின் கோரிக்கையை அதிபர் பித்யா தேவி ஏற்க மறுத்து விட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation