Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

துறைமுக நகர சட்டமூலத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்! ஜீ.எல்.பீரிஸ்

T

The Leader Desk

மே 19, 2021 • 12:21 PM

துறைமுக நகர சட்டமூலத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்! ஜீ.எல்.பீரிஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தவறான கருத்தொன்று நாட்டில் பரவலாகி வருவதாகவும் உண்மையான நிலைமை அதுவல்ல எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
  • “அப்படியானால், அரசாங்கத்தின் சார்ப்பில் நேற்று நான் கூறினேன், உயர்நீதமன்றம் பரிந்துரைக்கும் சகல திருத்தங்களையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதென்று.
  • “சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாயிலாக அரசாங்கம் உயர் நீதிமன்றத்திற்கு பல திருத்தங்களை முன்வைத்தது.
எழுத்து அளவு:

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தவறான கருத்தொன்று நாட்டில் பரவலாகி வருவதாகவும் உண்மையான நிலைமை அதுவல்ல எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

“சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாயிலாக அரசாங்கம் உயர் நீதிமன்றத்திற்கு பல திருத்தங்களை முன்வைத்தது. அந்த வழக்கின் தீரப்பை வாசித்துப் பார்த்தால், உயர்நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டதாக அதில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் திருத்தங்கள், குழுநிலையின் போது சட்டமூலத்தில் உள்ளடக்கினால் எந்தப் பிரச்சினையும் கிடையாது. எளிய பெரும்பான்மையினால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென அந்த தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

“அப்படியானால், அரசாங்கத்தின் சார்ப்பில் நேற்று நான் கூறினேன், உயர்நீதமன்றம் பரிந்துரைக்கும் சகல திருத்தங்களையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதென்று. வியாழக்கிழமை பின்னேரம் இடம் பெறவிருக்கும் குழுநிலை விவாதத்தின் போது சபாநாயகர் இவற்றை முன்மொழிவார். அதன்பின்னர், அவை சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டதன் பின்பு விசேட பெரும்பான்மை தேவைப்படாது. மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒருபோதும் தேவைப்படாது. எளிய பெரும்பான்மையால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்” என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...