Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சட்டத்தை மீறும் அனைவரையும் சமமாக நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்!

T

The Leader Desk

மே 18, 2021 • 9:44 AM

சட்டத்தை மீறும் அனைவரையும் சமமாக நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகக்கவசம் அணியாமல் கூட்டங்களில் பங்கேற்றமை குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலசூரிய, பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
  • தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை சுமார் 9,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
  • ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 01.
எழுத்து அளவு:

பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர்  முகக்கவசம் அணியாமல் கூட்டங்களில் பங்கேற்றமை குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலசூரிய,  பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் அவரது அமைச்சுடன் தொடர்புடைய கூட்டத்தில் கலந்து கொண்டபோது முகக்கவசத்தை அணிந்திருக்கவில்லை.

WhatsApp Image 2021 05 16 at 8.48.38 AM

இது தொடர்பிலான புகைப்படத்தை அமைச்சரின் ஊடகப் பிரிவே ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தத விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக,  தமது பொறுப்புகளை புறக்கணித்து, அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொது மக்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றி செல்லப்பட்டமை குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியான விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

பொலிஸ்மா அதிபருக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலசூரிய அண்மையில் (மே -11) எழுதிய கடிதத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த சட்ட மீறல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், அவசரகாலத்தில் கூட சட்டபூர்வமானதாகவும் அனைவருக்கும் சமமானதாகவும் இருக்க வேண்டுமென ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை சுமார் 9,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,  பொலிஸ்மா அதிபருக்கு மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 

01. கைதுகள் தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கு அமைய கைதுகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

02. கொரோனா தொற்றுநோயின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறும் அனைவருக்கு எதிராகவும் எவ்வித பாகுபாடும் இன்றி சட்டம் சமமாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

03. கைது செய்யப்படும் நபர்களை தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகள் மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதல்களுக்கு அமைய கொண்டு செல்ல வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஆகவே, அவசரகாலத்தில் கூட, தற்காலிக சட்டவிரோத நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தை முழு சமூகமும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற சட்டத்தை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ள பொலிஸ்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜகத் பாலசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...