Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

என்னால் முடிந்த வரை போராடுவேன்! சர்வதேச அழகி போட்டியில் மியன்மார் நாட்டின் சார்பில் பங்கேற்ற ஹடர் ஹட்டி ஹட்டி!

T

The Leader Desk

மே 17, 2021 • 11:07 AM

என்னால் முடிந்த வரை போராடுவேன்! சர்வதேச அழகி போட்டியில் மியன்மார் நாட்டின் சார்பில் பங்கேற்ற ஹடர் ஹட்டி ஹட்டி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கிடையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன.
  • இவர் 2013 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் மியன்மார் நாட்டின் சார்பில் பங்கேற்றார்.
  • தற்போது 32 வயதான ஹடர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
எழுத்து அளவு:

இதற்கிடையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மியான்மர் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவில் பலரும் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச அழகி போட்டியில் மியன்மார் நாட்டின் சார்பில் பங்கேற்ற பெண் மியன்மார் ராணுவத்திற்கு எதிரான சண்டையில் கிளர்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்துள்ளார்.

மியன்மார் நாட்டை சேர்ந்தவர் ஹடர் ஹட்டி ஹட்டி. இவர் 2013 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் மியன்மார் நாட்டின் சார்பில் பங்கேற்றார். சர்வதேச அழகி போட்டியில் அவர் இறுதி சுற்றுக்கு தேர்வு ஆகவில்லை ஆனால், மியன்மார் நாட்டின் சார்பில் ஹடர் ஹட்டி ஹட்டி பங்கேற்றார். தற்போது 32 வயதான ஹடர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

ஆனால், அவர் தற்போது மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளார். மியன்மாரின் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணத்தில் வாழ்ந்துவரும் இன ஆயுத குழுக்களுடன் இணைந்து ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்கியுள்ளார்.

ஹடர் ஹட்டி ஹட்டி தனது கையில் நவீன ரக துப்பாக்கியுடன் காட்டுப்பகுதியில் நிற்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், என்னால் முடிந்த வரை நான் போராடுவேன். அனைத்தையும் இழக்க நான் தயாராக உள்ளேன். எனது உயிரையும் கொடுக்க நான் தயாராகிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...