Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் பொலிஸாரின் கடமையை நினைவுபடுத்தியுள்ளனர்!

T

The Leader Desk

மே 14, 2021 • 4:58 PM

இலங்கை சட்டத்தரணிகள் பொலிஸாரின் கடமையை நினைவுபடுத்தியுள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமது காவலில் இருப்பவர்களைப் பாதுகாப்பது பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் கடமை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பொலிஸ்மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளார்.
  • பேலியகொட விசேட குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருடன் ஆயுதங்களைத் தேடும் போது சந்தேகநபர் பொலிஸாரைத் தாக்க முயன்றபோது கொல்லப்பட்டதாக பொலிஸாரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
  • ”மே 11ஆம் திகதி மற்றொரு சந்தேகநபரான மெலோன் மாபுல அல்லது ‘உரு ஜுவா’ உயிரிழந்தார்.
  • எட்டு வருடங்களாக காவலில் இருந்த மெலோன் மாபுல மே 11ஆம் திகதி, அவரது பெற்றோர் அவசர அழைப்பு இலக்கத்திற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அவரது பாதுகாப்பு குறித்து தகவல் அறிவித்திருந்த போதிலும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
எழுத்து அளவு:

தமது காவலில் இருப்பவர்களைப் பாதுகாப்பது பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் கடமை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பொலிஸ்மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளார்.

மெலோன் மாபுல அல்லது ‘உரு ஜுவா’ மற்றும் தாரக பெரேரா விஜசேகர அல்லது ‘கொஸ்கொட தாரக’ ஆகியோர் கடந்த நாட்களில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் காவலில் இருந்து இரண்டு சந்தேகநபர்கள் படுகொலை செய்த விடயத்தை  கடுமையாக கண்டிப்பதாக, சட்டத்தரணிகள் சங்கத்தி தலைவர், ஜனாதிபதியின் சட்டத்தரணி சலிய பீரிஸ் மற்றும் செயலாளர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரி ஆகியோர் கையெழுத்திட்டு, மே 13, வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்கள் நீதித்துறைக்கு புறம்பான கொலைகளின் அனைத்து அடையாளங்களையும் கொண்டிருப்பதால் காவலில் உள்ள நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அந்த சங்கம் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தாரக பெரேரா விஜசேகர தகுற்றவியல் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்து திடீரென பேலியகொடவில் உள்ள ஒரு சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், அவர் காவலில் கொல்லப்படுவார் என அவர் அஞ்சுவதாகவும் கடந்த 12ஆம் திகதி, தாரக பெரேரா விஜசேகரவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட சட்டத்தரணி அனோஜ் ஹெட்டியாரச்சி தனது கவலைகள் குறித்து பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுப் பணிப்பாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தெரிவித்திருந்தார்.

சட்டத்தரணியின் முறைப்பாட்டை அடுத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அதேநாள் இரவு, பொலிஸ்மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியதாக  அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

"மேலும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மணி நேரம் கழித்து, தாரக விஜசேகர கொல்லப்பட்டார்.

பேலியகொட விசேட குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருடன் ஆயுதங்களைத் தேடும் போது சந்தேகநபர் பொலிஸாரைத் தாக்க முயன்றபோது கொல்லப்பட்டதாக பொலிஸாரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சந்தேகநபரின் பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட  பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மற்றொரு சந்தேகநபர் கொல்லப்பட்ட விடயத்தையும்  சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

”மே 11ஆம் திகதி மற்றொரு சந்தேகநபரான மெலோன் மாபுல அல்லது ‘உரு ஜுவா’ உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னர் அவர் சார்பாக சட்டத்தரணி ஒருவர் பொலிஸில் முன்னிலையாகியிருந்ததாக எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது”

இத்தகைய மரணங்கள் சட்ட விதிக்கு முரணானது எனவும், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எட்டு வருடங்களாக காவலில் இருந்த மெலோன் மாபுல மே 11ஆம் திகதி, அவரது பெற்றோர் அவசர அழைப்பு இலக்கத்திற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும்  அவரது பாதுகாப்பு குறித்து தகவல் அறிவித்திருந்த போதிலும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சட்டத்தரணி ஹரிஷ்க சமாரநாயக்க அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அன்று இரவு நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தார், இந்நிலையில், மெலோன் மாபுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் விசாரணைக்கு என வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, அங்கிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மெலோன் மாபுலவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர்  சட்டத்தரணி  சேனக பெரேரா, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டவர்கள் குறித்த தமது அனுபவங்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை சட்டத்தரணிகள் பொலிஸாரின் கடமையை நினைவுபடுத்தியுள்ளனர்! | Tamil Leader | We Lead the Nation