Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம்!

T

The Leader Desk

மே 13, 2021 • 6:33 PM

இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காசாமுனைப்பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துவதும், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் வீச்சு மூலம் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது.
  • இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் 10 மூத்த ராணுவ பிரமுகர்களை கொன்று விட்டதாகவும், ஏவுகணை தளத்தினை குறி வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறியது.
  • காசா மீதான தங்களின் தாக்குதல் 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிற தாக்குதல்களில் மிகப்பெரியது என இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கூறின.
  • நேற்று முன்தினம் காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் 130 ரொக்கெட்டுகளை வீசினர்.
எழுத்து அளவு:

காசாமுனைப்பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துவதும், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் வீச்சு மூலம் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது.

கட்டிடம் தரை மட்டம்

காசா நகரில் அமைந்திருந்த அல் ஷாரூக் கோபுரத்தை இஸ்ரேல் வான்தாக்குதல் அழித்தது. இது ஹமாஸ் அமைப்பினருக்கு பேரிடியாக அமைந்தது. காரணம், இந்த கட்டிடத்தில்தான் ஹமாஸ் அமைப்பினரின் அல் அக்சா டி.வி. நிலையம் இயங்கியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் 10 மூத்த ராணுவ பிரமுகர்களை கொன்று விட்டதாகவும், ஏவுகணை தளத்தினை குறி வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறியது.

ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் மூத்த தளபதியும், பிற தலைவர்களும் இஸ்ரேல் தாக்குதலில் வீர மரணம் அடைந்ததாக தெரிவித்தனர். காசா மீதான தங்களின் தாக்குதல் 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிற தாக்குதல்களில் மிகப்பெரியது என இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கூறின.

இடைவிடாது ரொக்கெட் வீச்சு

ஆனால் ஹமாஸ் அமைப்பின் போராளிகளும் இடைவிடாது இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை தொடர்கின்றனர். நேற்று முன்தினம் காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் 130 ரொக்கெட்டுகளை வீசினர். இரு தரப்பு மோதல்களில் 67 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 7 இஸ்ரேலியர்கள் பலி ஆகினர்.

இதுபற்றி நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறுகையில், வன்முறைகள் நடந்து வருகிற நகரங்களுக்கு படைகளை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். அரேபியர்கள் யூதர்களை தாக்குவதையும், அரேபியர்களை யூதக்கூட்டத்தினர் தாக்குவதையும் நியாயப்படுத்த முடியாது என அவர் கூறியதாக உள்ளுர் ஊடகம் கூறியது.

1,600 ரொக்கெட்டுகள்

இதற்கிடையே, இரு தரப்பு மோதல் வலுத்ததில் இருந்து இதுவரை இஸ்ரேல் மீது காசா முனைப்பகுதியில் இருந்து 1,600 ரொக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் ஜோனத்தான் கான்ரிகஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே காசா முனையில் இருந்து ரொக்கெட் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கள் தொலைபேசியில் அழைத்துக்கூறினார்.

வன்முறை பதற்றம் குறைவதின் அவசியத்தையும், இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் பாதுகாப்புடன் வாழ உரிமை உண்டு என்று ஜோ பைடன் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் அவர் வலியுறுத்தினார்.

அச்சத்தில் மக்கள்...

இதற்கிடையே காசா பகுதி போர்க்களமாக காணப்படுவதாகவும், பல கட்டிடங்கள் தரை மட்டமாகி இருப்பதாகவும், இஸ்ரேலிய படையின் வான்தாக்குதலில் ஏராளமான கார்கள் உருக்குலைந்து போய்விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் ரொக்கெட் வீச்சுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நடுவானில் தடுத்து அழிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர் மோதல்களால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் ஹமாஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி உள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம்! | Tamil Leader | We Lead the Nation