Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

எரிவாயுவுக்கு விரைவில் தட்டுப்பாடு!

T

The Leader Desk

மே 13, 2021 • 5:26 PM

எரிவாயுவுக்கு விரைவில் தட்டுப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலக சந்தையில் எரிவாயுவின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளமை காரணமாக, இந்த இரு நிறுவனங்களும் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன.
  • ஆனாலும், இதுவரையில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி கிடைக்காமையினால், இந்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் விரைவில் மூடப்படக்கூடிய ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனம் இதுவரையில் 900 மில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அறிய முடிகின்றது.
  • இந்நிலையில் எதிர்வரும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலின்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக அறிய முடிந்துள்ளது.
எழுத்து அளவு:

உலக சந்தையில் எரிவாயுவின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளமை காரணமாக, இந்த இரு நிறுவனங்களும் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலின்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக அறிய முடிந்துள்ளது.

இந்த நிலையை கவனத்தில் கொண்டு வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் திறைசேரியின் அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடி, இந்த நிலையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளதாகவும் அறிய முடிந்துள்ளது.

ஆனாலும், இதுவரையில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி கிடைக்காமையினால், இந்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் விரைவில் மூடப்படக்கூடிய ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனம் இதுவரையில் 900 மில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அறிய முடிகின்றது.

குறிப்பாக, சந்தையில் லாஃவ்ஸ் எரிவாயு சிலின்டர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எரிவாயுவுக்கு விரைவில் தட்டுப்பாடு! | Tamil Leader | We Lead the Nation