Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

குருந்தூர்மலையில் புதிய விகாரை அமைக்கப்போகிறார்களா?

T

The Leader Desk

மே 11, 2021 • 9:42 AM

குருந்தூர்மலையில் புதிய விகாரை அமைக்கப்போகிறார்களா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இன்று புதிய விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
  • எனினும் அந்தப் பகுதிக்கு ஊடகவியலாளர்கள், மக்கள் அனுமதிக்கப்படாமையால் சரியான விவரங்களைப் பெறமுடியவில்லை.
  • முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமைப் படை அதிகாரி மற்றும் சுமார் 30 பௌத்த பிக்குகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் இணைந்து தோரணங்கள் கட்டி, பந்தல்கள் அமைத்து இந்த வழிபாடுகள் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இன்று புதிய விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அப் பகுதியில் புராதன பௌத்த விகாரை சிதைவுகள் உள்ளன என்று தெரிவித்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த வழிபாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் அந்தப் பகுதிக்கு ஊடகவியலாளர்கள், மக்கள் அனுமதிக்கப்படாமையால் சரியான விவரங்களைப் பெறமுடியவில்லை. தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து ஒன்றுகூடி வழிபாடுகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலைமையில் மாவட்ட நிர்வாகத்துக்கோ, சுகாதாரத் தரப்பினருக்கோ தெரியப்படுத்தாது பெரும் எண்ணிக்கையானோருடன் இந்த வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமைப் படை அதிகாரி மற்றும் சுமார் 30 பௌத்த பிக்குகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் இணைந்து தோரணங்கள் கட்டி, பந்தல்கள் அமைத்து இந்த வழிபாடுகள் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...