Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

உடனடியாக அங்குனகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்குச் செல்லுமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் கோரிக்கை!

T

The Leader Desk

மே 11, 2021 • 6:58 AM

உடனடியாக அங்குனகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்குச் செல்லுமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டின் கைதிகளின் உரிமைகளுக்கான முன்னணி அமைப்பு குறிப்பாக அங்குனகொலபெலெஸ்ஸ சிறைக்குச் சென்று கைதிகளின் அச்சத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளது.
  • சிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவதைத் தடுக்க கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு (ICRC) தடுப்பூசி போடுவது மட்டுமல்லாமல், போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், கைகழுவும் கிருமிநாசினிகள், சுகாதார வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் வழங்க.
  • இந்த தொற்றுநோயைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கைதிகள் நடத்திய போராட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து நிறுத்தியதால், அங்குனகொலபெலெஸ்ஸ சிறைச்சாலை கடுமையான நெருக்கடியில் இருக்கக்கூடும் என்று கைதிகளின் உரிமைகளுக்கான குழு (CPRP) முன்னர் எச்சரித்திருந்தது.
எழுத்து அளவு:

நாட்டின் கைதிகளின் உரிமைகளுக்கான முன்னணி அமைப்பு குறிப்பாக அங்குனகொலபெலெஸ்ஸ சிறைக்குச் சென்று கைதிகளின் அச்சத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளது.

இந்த தொற்றுநோயைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கைதிகள் நடத்திய போராட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து நிறுத்தியதால், அங்குனகொலபெலெஸ்ஸ சிறைச்சாலை கடுமையான நெருக்கடியில் இருக்கக்கூடும் என்று கைதிகளின் உரிமைகளுக்கான குழு (CPRP) முன்னர் எச்சரித்திருந்தது.

சிறைகளில் கைதிகள் அதிகமாக இருப்பதால் சமூக தனிமைப்படுத்தல் கடினமான செயல் என்று  CPRP அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, மே 9 அன்று இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) கடிதத்தில் போதிய சுகாதாரம், சத்தான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்காத்தால் கைதிகள் மேலும் சிரமப்படுவதாக அந்த அமைப்பு இலங்கை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது

எனவே, நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தகுந்த பரிந்துரைகள் செய்யப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் CPRP கூறுகிறது.

Senaka Perera 09சிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவதைத் தடுக்க கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு (ICRC) தடுப்பூசி போடுவது மட்டுமல்லாமல், போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், கைகழுவும் கிருமிநாசினிகள், சுகாதார வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் வழங்க. ”பரிந்துரைக்கும் படி CPRP தலைவர் வழக்கறிஞர் சேனக பெரேரா எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகள் தொடர்பான குழு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) இலங்கை பிரதிநிதியிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க தங்களை சந்திக்குமாறு கோரியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...