Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

மே 10, 2021 • 6:07 PM

கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கு பதிலாக தோல்வியுற்ற இணையவழி கல்வியை வழங்க அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • "ஊடக நிறுவனங்களின் தலைவர்களை வரவழைத்து இதற்கான திட்டத்தை வகுப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும்." கொவிட்-19 தொற்றுநோய் நாட்டில் பரவியுள்ள நிலையில், 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களின் கல்வி ஸ்தம்பித்துள்ளதோடு, மேலும் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • தற்போதைய சூழ்நிலையில், இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி செலவிடுவதற்கு முன்னர், கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
எழுத்து அளவு:

இதற்கு பதிலாக தோல்வியுற்ற இணையவழி கல்வியை வழங்க அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

"தற்போது, கல்வி அமைச்சு, மாகாண கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களின்  அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.”

Joshop Starlin பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கும்வரை, ஆசிரியர்கள் தோல்வியுற்ற இணையவழி   கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என   சுட்டிக்காட்டியுள்ள, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,  இணையவழி   கல்வி தோல்வி என்பதை, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவும்   ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 தோல்வியடைந்த திட்டமென தெரிந்தும், ஆசிரியர்களை அதனை செய்யும்படி கட்டாயப்படுத்துவது கல்வி   அதிகாரிகளின் ஒரே கொள்கையாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட தொழிற்சங்க பொதுச்   செயலாளர்  ஜோசப்   ஸ்டாலின், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் வரை முறையான அட்டவணை மூலம் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி கல்வியை வழங்குவது ஒரு நடைமுறைத் சாத்தியமான திட்டமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

"ஊடக நிறுவனங்களின் தலைவர்களை வரவழைத்து இதற்கான திட்டத்தை வகுப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும்."

கொவிட்-19 தொற்றுநோய் நாட்டில் பரவியுள்ள நிலையில், 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களின் கல்வி ஸ்தம்பித்துள்ளதோடு, மேலும் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சுகாதார பாதுகாப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு தரமான முகக்கவசங்களை வழங்குதல் உள்ளிட்ட பாடசாலைகளுக்கென ஒரு சுகாதாரத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும், எனினும், இந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அரசாங்கம், 54.70 பில்லியன் ரூபாய் செலவில் ருவன்புர அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, 625 மில்லியன் ரூபாய் செலவில் 500 உடற்பயிற்சி மையங்களை அமைக்கவும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி செலவிடுவதற்கு முன்னர், கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

தடுப்பூசி வழங்கலின்போது  முன்னுரிமை அளிக்க வேண்டிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மீண்டும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னர் தடுப்பூசியை வழங்குவது அவசியமான விடயம் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பேராதெனிய பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய கழுவி பயன்படுத்தக்கூடிய நனோ தொழில்நுட்பத்துடன் கூடிய முகக்கவசங்களை இலவசமாக வழங்குதல், பாடசாலைகளுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், பாடசாலைகளுக்கு போதுமான கிருமிநாசினிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் விடயத்தில் முன்னுரிமைளித்து செயற்பட வேண்டும், ” என இலங்கை ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Mask

இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக, அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகளை சந்தித்த பின்னர், கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...