Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சீன ரொக்கெட்டின் உடைந்த பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்த சிதறியதாக அறிவிப்பு!

T

The Leader Desk

மே 9, 2021 • 7:24 AM

சீன ரொக்கெட்டின் உடைந்த பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்த சிதறியதாக அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புவியின் வளி மண்டலத்தில் நுழைந்தபோது ரொக்கெட்டின் பெரும்பகுதி சிதைந்துவிட்டதாகவும், ஆனால், சில பாகங்கள் 72.47° கிழக்காகவும் 2.65° வடக்காகவும் விழுந்தது என சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
  • லாங் மார்ச்-5b ரொக்கெட் பாகம் அதிவேகமாக புவியை நோக்கி திரும்பி வருவதை அமெரிக்க, ஐரோப்பிய தளங்கள் கண்காணித்து வந்தன.
  • கிரீன்விச் சராசரி நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 2.24 மணிக்கு ரொக்கெட்டின் பாகங்கள் புவியின் வளி மண்டலத்தில் நுழைந்ததாக சீன அரசு ஊடகம் குறிப்பிடுகிறது.
  • இது இந்திய நேரப்படி 7.54 மணி.
எழுத்து அளவு:

புவியின் வளி மண்டலத்தில் நுழைந்தபோது ரொக்கெட்டின் பெரும்பகுதி சிதைந்துவிட்டதாகவும், ஆனால், சில பாகங்கள் 72.47° கிழக்காகவும் 2.65° வடக்காகவும் விழுந்தது என சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இடம் மாலை தீவுக்கு மேற்கே உள்ளது.

லாங் மார்ச்-5b ரொக்கெட் பாகம் அதிவேகமாக புவியை நோக்கி திரும்பி வருவதை அமெரிக்க, ஐரோப்பிய தளங்கள் கண்காணித்து வந்தன. கிரீன்விச் சராசரி நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 2.24 மணிக்கு ரொக்கெட்டின் பாகங்கள் புவியின் வளி மண்டலத்தில் நுழைந்ததாக சீன அரசு ஊடகம் குறிப்பிடுகிறது. இது இந்திய நேரப்படி 7.54 மணி.

லாங் மார்ச்-5b அரேபிய தீபகற்பத்துக்கு மேலே வளி மண்டலத்துக்குள் நுழைந்ததை உறுதிப்படுத்த முடிவதாகவும் நிலத்திலோ, நீரிலோ இதனால் தாக்கம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி கட்டளைத் தளம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இந்த ரொக்கெட் பாகங்கள் மக்கள் வாழும் இடங்களில் விழுந்தால் என்ன ஆவது என்ற அச்சம் இருந்துவந்தது. சுற்றுவட்டப் பாதையில் இருந்து ரொக்கெட் விழும் அளவுக்கு சீனா கவனக்குறைவாக இருந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியிருந்தார்.

ஆனால், விண்வெளி குப்பை ஒன்றினால், புவியில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்று வல்லுநர்கள் கூறிவந்தனர். புவியின் பெரும்பகுதி கடலாக இருப்பதாலும், இருக்கும் நிலப்பரப்பிலும் பெரும்பகுதி மக்கள் வாழாத பகுதி என்பதாலும் இந்த கணிப்புக்கு அவர்கள் வந்தனர்.

சீனா உருவாக்கிவரும் விண்வெளி நிலையத்தின் முதல் அலகினை லாங் மார்ச்-5b ரொக்கெட்டைப் பயன்படுத்தி கடந்த மாதம் செலுத்தியது சீனா. புவியை நோக்கி விழுந்த ராக்கெட் பாகத்தின் எடை 18 டன். பல பத்தாண்டுகளில் புவியை நோக்கி விழுந்த செலுத்தப்படாத வெகு சில பொருள்களில் ஒன்று இது.

இந்த பாகத்தின் வீழ்ச்சியை கவனித்துவருவதாகவும், ஆனால் அதை சுட்டுத் தள்ளும் திட்டம் ஏதுமில்லை என்றும் கடந்த வாரம் அமெரிக்கா கூறியது.

Map: Image shows the approximate landing point of the rocket

ரொக்கெட் பாகம் விழுந்ததாக கூறப்படும் இடம்:

சனிக்கிழமை இரவோ, ஞாயிறு அதிகாலையோ இந்த ரொக்கெட் பாகம் வளி மண்டலத்தில் நுழையலாம் என்று விண் குப்பை தொடர்பான வல்லுநர்கள் கணித்திருந்தனர். வளி மண்டலத்தில் நுழையும்போது இந்த ரொக்கெட் பாகத்தின் பெரும்பகுதி எரிந்துவிடும் என்றும் அவர்கள் கணித்தனர்.

பூமியில் விழும் சீன ரொக்கெட்: யாருக்கு ஆபத்து?

ஆனால், அதி உயர் வெப்பநிலை மட்டுமே உருகும் உலோகங்கள், வெப்பத்தை தாங்கி நிற்கும் பொருள்கள் வளிமண்டல அழுத்தத்தை தாங்கி நிற்கலாம் என்ற சந்தேகமும் இருந்தது.

இதைப்போல ஒரு ரொக்கெட் பாகம் ஓராண்டுக்கு முன்பு புவியில் விழுந்தபோது, அதன் குழாய் அமைப்பு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று ஆபிரிக்காவின் ஐவரி கோஸ்ட்டில் கண்டறியப்பட்டது.

இந்த ரொக்கெட் பாகம் விழுவதால் ஏற்பட்ட ஆபத்து தொடர்பாக மேற்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை மிகைப்படுத்தப்பட்டவை என்று விமர்சித்த சீன ஊடகம், ஏதோ ஒரு பெருங்கடற்பரப்பில் இந்த சிதைவுகள் விழும் என்று கூறியது.

லாங் மார்ச்-5b

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...