Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள்! யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

T

The Leader Desk

மே 7, 2021 • 1:27 PM

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள்! யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
  • மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் ஆயிரத்து 688 பேர் யாழ்.
  • மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி யுள்ளார்கள் என்பதுடன் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன.
எழுத்து அளவு:

யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “யாழ். மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் ஆயிரத்து 688 பேர் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி யுள்ளார்கள் என்பதுடன் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனைவிட தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், யாழில் ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 261 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்திய அளவிலும் சில விடயங்களுக்குத் தடை விதித்தும் இருக்கின்றோம்.

தற்போது, பொலிஸார் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சில முன்னேற்ற நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதாவது, ஏற்கனவே கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இருந்த இரண்டு சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் சில சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றும் கிளிநொச்சியிலும் 230 கட்டில்களுடன் ஒரு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்துள்ளோம். அத்தோடு மருத்துவமனைகளையும் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சைக்குரிய கட்டில்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. எனவே, அதனையும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் எடுத்துள்ளார்கள்.

எனவே, மட்டுப்படுத்தப்பட் வைத்திய வசதிகள் காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

புதிய வீரியம்மிக்க வைரஸ் பரவல் நாட்டில் இருக்கின்றமையினால் சுகாதார நடைமுறைகளைப் பொதுமக்கள் இறுக்கமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்” என அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதி முழுமையாக நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதியில் 11 நோயாளர் படுக்கைகளும் , நான்கு அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்களும் உள்ள நிலையில் அவையனைத்தும் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவுடன் நிரம்பியுள்ளன.

அத்துடன், குறித்த விடுதியில் தங்கி சிகிச்சைபெற்று வருவோர் 50 வயதுக்கும் கீழானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...