Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல! உலபனே சுமங்கல தேரர்

T

The Leader Desk

மே 7, 2021 • 6:31 AM

கொரோனாவை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல! உலபனே சுமங்கல தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • அங்கு அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி தற்போது நாட்டிலுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்தை விடவும் அதிகரித்துள்ளது.
  • அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் முதலாவதாக நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாக சீர்குலைக்கும் வகையில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்கள்.
  • ஆனால் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிலியந்தலை பிரதேசம் 8 மணித்தியாலத்திற்கும் குறைவான காலத்தில் காமினி லொக்குகேயின் உத்தரவிற்கமைய மீண்டும் திறக்கப்பட்டது.
எழுத்து அளவு:

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி தற்போது நாட்டிலுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்தை விடவும் அதிகரித்துள்ளது.

ஆனால் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தினால் இதற்கு முற்றிலும் முரணான தகவல்களே வெளியிடப்பட்டுள்ளன.

தொற்று நோய்த்தடுப்புப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விடவும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதனால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

எனவே தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் நாட்டுமக்களை ஏமாற்றி, இன மற்றும் மதவாதத்தைத் தூண்டி, பொய்யானதொரு 'தேசப்பற்று' என்ற மாயை உருவாக்கி, அதனூடாகவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. அவ்வாறு பொய் கூறுவதையே கொள்கையாகவைத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது அத்தகைய பொய்களையே தொடர்ந்தும் கூறி ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் முதலாவதாக நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாக சீர்குலைக்கும் வகையில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்கள். அந்தத் திருத்தத்தின் ஊடாக இதுவரைகாலமும் பாராளுமன்றத்திடமும் மக்களிடமும் காணப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் தனியொரு நபரின் கைகளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னர் நாட்டுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் செயற்படுவோம், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறியவர்கள் இப்போது எங்கே?

சீனாவிற்கு மாத்திரமே அரசாங்கமும் ஜனாதிபதியும் அச்சப்படுகிறார்கள் என்றே முதலில் நினைத்தோம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் பயம் என்பது இரு நாட்களுக்கு முன்னர் பிலியந்தலை பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவத்தின் ஊடாக உறுதியாகியுள்ளது. பொதுவாக ஒருவர் முகக்கவசம் அணியாவிட்டால், அவருக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிலியந்தலை பிரதேசம் 8 மணித்தியாலத்திற்கும் குறைவான காலத்தில் காமினி லொக்குகேயின் உத்தரவிற்கமைய மீண்டும் திறக்கப்பட்டது. அவ்வாறெனில் காமினி லொக்குகேயிற்கு எதிரான ஏன் இதுவரையில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை?

இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் மூலம் இந்த அரசாங்கம் தலைவரொருவரின்றி பயணிப்பது தெளிவாகின்றது. எனினும் அதனால் ஏற்பட்ட தாக்கங்களை நாட்டின் மக்களே அனுபவிக்கின்றார்கள். இந்த அரசாங்கம் வெளியிடுகின்ற வர்த்தமானி அறிவித்தல்கள் அல்லது புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரையில் அவை உண்மையில் அமுலில் உள்ளனவா? இல்லையா? என்ற கேள்வி இருக்கின்றது. பசுவதை தொடர்பில் அரசாங்கம் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தது.

எனினும் அது தற்போதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேபோன்று புர்கா தொடர்பிலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்திற்கும் கூச்சலிடுகின்ற ஒரு சிறுபிரிவினரைத் திருப்திப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இத்தகைய தற்காலிகத் தீர்மானங்களை மேற்கொள்கின்றது. மாறாக நாட்டின் நலனை வலுப்படுத்துவதற்கான நோக்கம் எதுவும் அதிலில்லை.

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதோ, அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதோ அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. மாறாக துறைமுக நகரத்தை இலங்கை சட்டத்திற்குள் அடங்காதவாறு எவ்வாறு சீனாவிற்கு வழங்குவது என்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளது. நாட்டை சீர்குலைக்கும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, அனைவரையும் கவரக்கூடிய சில வார்த்தைகளைக் கூறுவது வழக்கமாக இருந்துவருகின்றது.

அந்தவகையில் தற்போது அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான முன்னுதாரணமாக சீனா இருப்பதாகக் கூறுகின்றார்கள். கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்த நெருக்கடி நிலையிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்ற தர்க்கமே பாராளுமன்றத்தில் உருவாகவேண்டும். அரசியல் கொள்கை மற்றும் கட்சிபேதங்களைப் புறந்தள்ளி சர்வகட்சி மாநாட்டில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, அனைவரினதும் ஒத்துழைப்புடன் இந்த சவாலுக்குத் தீர்வுகாண முற்படவேண்டும். அதன் மூலமே எமது நாடு இந்த நெருக்கடியிலிருந்து மீளமுடியும் என்று குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...