Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மூன்றாவது அலையால் வழக்கு விசாரணைகள் தாமதமாவதை தடுக்க நடவடிக்கை!

T

The Leader Desk

மே 6, 2021 • 5:00 PM

மூன்றாவது அலையால் வழக்கு விசாரணைகள் தாமதமாவதை தடுக்க நடவடிக்கை! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நுகேகொடை நீதிமன்றத்தின் பதிவாளர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் (04) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
  • வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படும் போது சம்பந்தப்பட்ட பொலிஸார் மற்றும் சட்டத்தரணியை நீதிமன்றம் ஸ்கைப் வழியாக தொடர்பு கொள்ளும்.
  • வழக்கு விசாரணைக்கு வரும்போது, சட்டத்தரணி வழங்கிய ஸ்கைப் கணக்கின் ஊடாக நீதிமன்றம் அவரை தொடர்புகொள்ளுமென நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

நுகேகொடை நீதிமன்றத்தின் பதிவாளர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் (04) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

இதற்கமைய,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பிலான வழக்குகள் ஸ்கைப் ஊடாக முன்னெடுக்கப்படுவதோடு, பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்படுமாயின், அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் சட்டத்தரணிகள் ஸ்கைப் ஊடாக  நீதிமன்றத்தை தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தினமொன்றில் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டிய வழக்குகளில், பிணை கோரிக்கை விடுக்கப்படும் வழக்கு எண்,  பிணை கோரிக்கை விடுக்கும் சட்டத்தரணியின் பெயர், தொடர்புகொள்ள வேண்டிய ஸ்கைப் பெயர் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை, அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தின் ஸ்கைப் கணக்கிற்கு ஒரு குறுந்தகவல் ஊடாக அனுப்பி வைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் ஸ்கைப் ஊடாக தொடர்புடைய சட்டத்தரணிக்கு அனுப்பி வைக்கப்படுமென நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வரும்போது, சட்டத்தரணி வழங்கிய ஸ்கைப் கணக்கின் ஊடாக நீதிமன்றம் அவரை தொடர்புகொள்ளுமென நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபர்களை கைது செய்து நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தும் நாளாந்த நடவடிக்கையின்போது, சந்தேகநபர்களை தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கும் சட்ட நோக்கத்திற்காக மாத்திரமே நீதிபதி சந்தேகநபர்கள் குறித்து ஆராய்வார் எனவும்,  வழக்கு விசாரணையில் வாதி மற்றும் பிரதிவாதியின் கூற்றுக்களை ஸ்கைப் ஊடாக மாததிரமே பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வழக்கில், ஒரு சட்டத்தரணி பிணை மனுவை தாக்கல் செய்ய வேண்டுமெனின், சந்தேகநபரின் பெயர் மற்றும் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தும் பொலிஸ் நிலையத்தின் விபரங்கள், சட்டத்தரணியின் பெயருடன் ஸ்கைப் ஊடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படும் போது சம்பந்தப்பட்ட பொலிஸார் மற்றும் சட்டத்தரணியை நீதிமன்றம் ஸ்கைப் வழியாக தொடர்பு கொள்ளும்.

ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தை தொடர்புகொள்ளும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு பொருத்தமான ஆடை அணிந்திருக்க வேண்டுமென, நுகேகொடை நீதவான் நீதிமன்ற  நீதிமன்றத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படாவிடின் ஸ்கைப் வழியாக வழக்கு விசாரணைகளில் முன்னிலையாக சட்டத்தரணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...