Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக அரசு மருத்துவமனை நிர்வாக நியமனங்களை வழங்குமாறு அழுத்தம்!

T

The Leader Desk

மே 6, 2021 • 9:53 AM

சட்டத்திற்கு புறம்பாக அரசு மருத்துவமனை நிர்வாக நியமனங்களை வழங்குமாறு அழுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும், எந்தவொரு மருத்துவரும் உயர் நிர்வாக பதவிகளுக்கு எம்.டி MD (Doctor of Medicine in Medical Administration) (மருத்துவ நிர்வாகத்தில் மருத்துவ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவ நிர்வாகிகளால் நியமிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகள்!
  • இது ஒரு பிஎச்டி PhD (Doctor of Philosophy) க்கு சமம்.
எழுத்து அளவு:

MBBS (Bachelor of Medicine, Bachelor of Surgery) இளங்கலை மருத்துவம், அறுவை சிகிச்சை), அறுவை சிகிச்சை இளங்கலை தேர்ச்சி பெற்ற இலங்கை மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு மருத்துவரும் அரசு மருத்துவமனையில் நிர்வாக பதவியைப் பெறுவதற்கு Master of Health Administration தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், எந்தவொரு மருத்துவரும் உயர் நிர்வாக பதவிகளுக்கு எம்.டி MD (Doctor of Medicine in Medical Administration)  (மருத்துவ நிர்வாகத்தில் மருத்துவ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது ஒரு பிஎச்டி PhD (Doctor of Philosophy) க்கு சமம்.

முன்னதாக, இந்த பதவிகள் தொடர்பான சர்ச்சைகளில் நீதிமன்றங்கள் முன் ஆஜரானபோது இதே போன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.

நீதிமன்ற தீர்ப்பிற்கமைய எங்களுக்கு அறிவித்ததன் படி நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததன் மூலம் தான் தர்மசங்கடத்தில் இருப்பதாகவும் பதவி நிலைகளை மீறி நிர்வாக பதவிகளை(எம்.டி.) வழங்குமாறு அழுதத்தம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ நிர்வாகிகளால் நியமிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகள்!

இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தகுதியற்றவர்களை மருத்துவ நிர்வாக பதவிகளுக்கு நியமிக்குமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதாக 'மருத்துவ நிர்வாகிகள் மன்றம்' குற்றம் சாட்டுகிறது.

மருத்துவ நிர்வாக பதவிகளுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பதில் மருத்துவ நிர்வாக முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறி வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவிப்பை ரத்து செய்யுமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுகாதார அமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் மன்றம் கூறுகிறது.

துணை மருத்துவ நிர்வாக தரத்தில் சிறப்பு பொது சுகாதார நிறுவனங்களில் 18 பதவிகளை நியமிப்பதில் சமூக சுகாதார முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், மீதமுள்ள இடங்குகளுக்கு மருத்துவ நிர்வாக தரத்தில் நிர்வாக பதவியில் முதுகலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ நிர்வாகிகள் மன்றம் பரிந்துரைக்கிறது.

மருத்துவ நிர்வாக சேவையில் வெற்றிடங்கள்!

இருப்பினும், இதுபோன்ற நிர்வாக நியமனங்களை எதிர்நோக்கியுள்ள மருத்துவர்கள், மருத்துவ நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக வெற்றிடங்கள் உள்ளன, ஆனால் அவற்றை நிரப்ப சுகாதார அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் உள்ளன, அவை நிர்வாக பணிப்பாளரால் நிரப்பப்படுகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சட்டத்திற்கு புறம்பாக அரசு மருத்துவமனை நிர்வாக நியமனங்களை வழங்குமாறு அழுத்தம்! | Tamil Leader | We Lead the Nation