Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கொரோனா தொற்றால் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்!

T

The Leader Desk

மே 6, 2021 • 5:09 AM

கொரோனா தொற்றால் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு (74) இன்று அதிகாலை காலாமானார்.
  • இதே வேலை, ஒவ்வொரு பூக்களுமே.
  • அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.
எழுத்து அளவு:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு (74) இன்று அதிகாலை காலாமானார்.

முன்னதாக கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது,  இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி குமுதாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.கெப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதே வேலை,

ஒவ்வொரு பூக்களுமே... பாடல் மூலம் பிரபலமான கோமகன் கொரோனா பாதிப்புக்கு மரணமடைந்துள்ளார்

ஒவ்வொரு பூக்களுமே... பாடல் மூலம் பிரபலமான கோமகன் கொரோனா பாதிப்புக்கு மரணம்; இயக்குனர் சேரன் இரங்கல்

ஆட்டோகிராப் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் மூலம் பிரபலமான கோமகன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார்.

தமிழில் இயக்குநர் மற்றும் நடிகரான சேரன் மற்றும் நடிகைகள் சினேகா, கோபிகா ஆகியோரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப்.  இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே... என்ற பாடல் மக்களை அதிகம் ஈர்த்தது.

இந்த பாடலில், கண் பார்வையற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து சாதிக்கலாம் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்த பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் கோமகன்.  சமீபத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.  அவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி இயக்குநர் சேரன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. என தெரிவித்து உள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...