Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நான்கு நகரங்களை மட்டும் நவீனமயப்படுத்த பிரதமர் திட்டம்!

T

The Leader Desk

மே 5, 2021 • 3:58 PM

நான்கு நகரங்களை மட்டும் நவீனமயப்படுத்த பிரதமர் திட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் இதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
  • குருநாகல் நகரை நவீன நகரமாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கேட்டறிந்துகொண்டாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
  • இந்நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்து அமைச்சின் அதிகாரிகளுக்கு இதன்போது பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
எழுத்து அளவு:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் இதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்து அமைச்சின் அதிகாரிகளுக்கு இதன்போது பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நவீன சந்தை கட்டடத்தொகுதி, அனைத்து வசதிகளையும் கொண்ட மொத்த விற்பனை நிலையம், வாராந்த சந்தை, வாகன நிறுத்துமிடம், நகர் பூங்கா, பஸ் தரிப்பிடம், பல்நோக்கு கட்டடம் மற்றும் நடுத்தர வர்க்க வீடமைப்புத் தொகுதி உள்ளடங்கலாக பெலிஅத்த நகர் அபிவிருத்தி செய்யப்படும் விதம் குறித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இரட்டை வழிச்சாலை அமைப்பு, வெளியிலும் உள்ளேயும் சுற்றுவட்டப் பாதை, நான்கு பாதைகள் கொண்ட சாலை அமைப்பு என்பவற்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையத்தை மையமாகக் கொண்டு வர்த்தகம், தொழில், குடியிருப்பு வசதிகள், சுற்றுலா, சுகாதார வசதிகள் மற்றும் விவசாய மேம்பாட்டு வலயங்களை நிறுவுதல் மற்றும் மத்தளை – லுணுகம்வெஹெர பகுதியில் செயற்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.

குருநாகல் நகரை நவீன நகரமாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கேட்டறிந்துகொண்டாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, குருநாகல் நகரை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமரின் முடிவு இப்படியிருக்க,இலங்கையில் இன்னும் எத்தனை கிராமங்கள் அடிப்படை வசதி இன்றி  இருக்கின்றது அவர்களும் இந்த நாட்டு மக்கள்தான்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...